செத்த பிணம் தொழும் சாகும் பிணங்கள்

பம்பாயில் இருந்தோ, கோவையில் இருந்தோ, ஒவ்வொரு சாவுக்கும் துட்டி கேட்டு போவது எண்ணியும் பார்க்க இயலாதது. பெத்த அப்பா இறந்தபோது, பம்பாயில் இருந்த நான், 1976ல், கையில் காசில்லாத காரணத்தால் , காடேற்றும் கழிந்து சாம்பலும் கரைத்த பிறகே சென்று சேர்ந்தேன். பெற்ற தகப்பனின் முகத்தைக் கடைசியாகக் காணக் கொடுத்து வைக்காது போனதன் காரணம் நான் செய்த பாவம் அல்ல. நான் சேர்க்க முடியாத பணம்.
பிறகு அப்பாவைப் பெற்ற ஆத்தா, பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை காலமான சேதி வந்தபோது, கோலிவாடா வீட்டுவசதி வாரிய அடுக்ககம் ஒன்றில் குடியிருந்த நான், அறைக்கு சென்று குளிக்க மட்டுமே செய்தேன்.
நெடுமங்காடு தாலுகா, ஆரியநாடு கிராமம், குற்றிச்சல் எனும் குன்றின் மேலிருக்கும் கேரளத்துக்காட்டுப் பகுதியில் பிறந்த என் அம்மா சரசுவதி, வீரநாராயணமங்கலத்தில் 2016 செப்டம்பர் மாதம் 16-ஆம் நாள் அதிகாலை தனது 90-ஆவது வயதில் இறந்தபோது, நான் சென்னையில் இருந்து சிங்கப்பூர் போகும் விமானத்தில் இருந்தேன். என் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனக்கு முன்பே விஷ்ணுபுரம் இலக்கியவட்ட காவிய முகாமுக்காக சிங்கப்பூர் சென்று சேர்ந்துவிட்டிருந்த நண்பர்கள் அனைவரும், சிங்கப்பூர் நேரம் காலை 8.30-க்கு ஜெயமோகன் தலைமையில் எனக்காக விமான தளத்தில் காத்திருந்தனர். கூட்டமாக அவர்களைப் பார்த்ததும், ராத்திரி ராமானமே, நம்மை மானில மதுவிலக்குத்துறை அமைச்சராக நியமித்துவிட்டார்களோ என அஞ்சினேன். அம்மா இறந்த செய்தி எனக்க முன்பே அவர்களைச் சென்றடைந்திருந்தது. . அவர்கள் உதவியால் , கொச்சி வழியாக, 17-ம் நாள் காலை என்னால் நாகர்கோயில் சென்று சேர முடிந்தது. மூத்த மகன் என்பதால் 17-ஆம் தேதி மாலை கொள்ளி வைக்கப்போட்ட மொட்டை, 25-ஆம் நாள் காலை கருமாதி செய்யப்போட்ட மொட்டை மறைந்து முன்புபோல் முடியும் வளர்ந்துவிட்டது. ….(நாஞ்சில் நாடன்)
%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae %e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae %e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae %e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae %e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae %e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae %e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae %e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to செத்த பிணம் தொழும் சாகும் பிணங்கள்

  1. Anbu Sellamuthu சொல்கிறார்:

    கடந்த ஈராண்டுகளாக உங்களின் எழுத்துகளை வாசித்துவருகிறேன் ங்க ஐயா. உங்களின் சமூகத்தின் மீதான காதலை, அறச்சீற்றங்களை அறிவேன். உங்களின் எழுத்து என் பண்புகளைப் பண்படுத்தியிருக்கிறது. என்றும் உங்களைத் தொடர விரும்புகிறேன். நான் கோவையில் 2001 வரை இருந்தும் உங்களைப்பற்றி அறியாது இருந்திருக்கிறேன் என்று சில நேரங்களில் வருந்தியிருக்கிறேன். ஏதோ ஒரு கட்டுரையொன்றில் உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரளப்பேருந்துக்காக வரிசையும், பழனி செல்லும் நம்மூர் பேருந்துகளுக்கு மட்டும் வரிசையில்லா நம் மனநிலையை சாடியிருந்ததைப் படித்தபோதுதான் நீங்கள் கோவையில் இருக்கிறீர்கள் என்றறிந்தேன். நானும் பொள்ளாச்சி செல்வதற்காக நின்ற ஒவ்வொரு நாளிலும் இதைத்தான் நினைத்துக்கொள்வேன். அதைத்தொடர்ந்து உங்களுடைய புதினங்களான கான் சாஹிப், என்பிலதனை, பூனைக்கண்ணன் கடத்திய அம்மன் நூல்களை வாசித்தேன் ங்க. தங்களின் தாயார் காலமான செய்தியை உங்களின் இந்தப் பக்கத்தின்மூலம் அறிந்து வருந்தினேன். உங்களிடம் பேசவேண்டும் என்றும் விரும்பினேன். ஏனோ சற்று கூச்சமாக இருந்ததால் அழைக்கவில்லை ங்க ஐயா. உங்களை வாசிப்பதில் நான் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன் ங்க. உங்களிடமிருந்து தமிழுடன் நான் கற்றுக்கொண்டது ஏராளம் ங்க..
    நீங்கள் நீடு வாழ இறை அருளட்டும் !!

    இப்படிக்கு
    தமிழுடன்
    செ. அன்புச்செல்வன்

  2. Ganesh சொல்கிறார்:

    சவுக்கடி ! வேறென்ன ?

    “இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா ”
    இயம்பின இளங்கோவை
    இவ்வையம் மறந்தது !

    நாஞ்சிலார் வாக்கையேனும்
    நாவில் வைத்தால்…

    அந்தோ !
    அஞ்சுக்கும் பத்துக்கும்
    அரசியல் எலிகள் அலையா !!

  3. harikarthikeyanramasamy சொல்கிறார்:

    எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் அவசியம் …. மிக நல்ல பதிவு , நன்றி திரு.நாஞ்சில்நாடன்

  4. natesh சொல்கிறார்:

    நானே மறந்து கொண்டிருக்கும் என் மொழியின் பல வார்த்தைகளை நினைவுக்கு கொண்டு வரும் தங்களுக்கு என் நன்றிகள்.

  5. அ.வேலுப்பிள்ளை சொல்கிறார்:

    கும்பமுனியின் குமுறல் மற்றோருக்கு கேட்குமோ ?,,,தெரியாது,,,ஆயின்,,என் காதுகளில்,,,,,செத்த பிணத்தைச் சுற்றி இனிச் சாம் பிணங்கள் கத்துங் கணக்கென்ன காண் கயிலை நாதனே !,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s