இத்தனைக்கும் மேலாக ஒரு எழுத்தாளனாக அவர் இப்போது செய்துகொண்டிருக்கும் காரியமே தமிழுக்கு அவருடைய முக்கியமான பங்களிப்பாக, அவரது வாழ்நாள் பங்களிப்பாகவும் இருக்கும். இன்றைய நம் தலைமுறை தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழின் மரபிலக்கியங்களை புத்துயிர்த்துத் தருகிற மகத்தான பணியினை அவர் செய்துகொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் பேராசிரியர்களும் செய்யவேண்டிய சாதனைப் பணியினை அவர் மேற்கொண்டிருக்கிறார். …(எம். கோபாலகிருஷ்ணன்)
திரு. நாஞ்சில் நாடனிடம் மிகவும் பிடித்தது
சமகால சமூக பிரச்சனைகளை, சமூக அவலங்களை அணுகும் முறை , பொறுப்புணர்வோடு தம் எழுத்தின்மூலம் வெளிப்படுத்தும்விதம் , மரபிலக்கியங்களை என்போன்ற தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது , நிறைய பழந்தமிழ் சொற்களை கையாள்வது,வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது , தொடர்ந்து நீண்ட காலமாக தமிழுக்கு அவர் ஆற்றிவரும் அரும்பணிகள்.