கும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்க்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சி நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன் (… கீரனூர் ஜாகிர்ராஜா)
உயிரெழுத்து(டிசம்பர் 2016)