கம்ப ராமாயாணத்தில், யுத்த காண்டத்தில், இந்திரசித்து வதைபடலத்துக்கு அடுத்த படலம், இராவணன் சோகப்படலம். தலையற்ற இந்திரசித்தின் உடல்மீது இராவணன் வீழ்ந்து அரற்றும் பாடல் வரிகள்-
“எனக்கு நீ செய்யத் தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி, உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?”
எனக்கு நீ செய்யதக்க இறுதிக் கடன்களை எல்லாம் வருந்தி, வருந்தி, உனக்கு நான் செய்யும் நிலையில் இருக்கிறேன். என்னைவிட உலகில் இழிந்தவர்கள் எவருண்டு என்பது பொருள்.
நானோ, நா. முத்துகுமார் என்ற அற்புதமான மனிதனுக்கு, நண்பனுக்கு,தம்பிக்கு, இரங்கல் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்………..(நாஞ்சில் நாடன்)
நா. முத்துக்குமாரின் இழப்பு மனதுக்கு வருத்தமாக இருக்கிறது, நல்ல பகிர்வு