நாங்க வீட்டுல ஏழு பேருங்க. இதுல நான்தான் மூத்தவன். எனக்கு அடுத்து ஒரு தங்கை. அப்புறம் ஐந்து தம்பிகள், அப்புறம் எங்க அப்பாவோட அம்மா, எங்க அம்மையோட அம்மா இவங்க நாலு, நாங்க ஏழு ஆக பதினோரு பேருக்கு அம்மா பொங்கும். பெரிய மண்பானையில் பத்துலிட்டர் கொள்ளளவு இருக்கும் பொங்குவாங்க. மத்தியானம் பொங்குனா அதுதான் ராத்திரிக்கும், மீந்தது காலையில் பலகாரம் -அதாவது கஞ்சி. எருமை இருந்ததால மோர் இருக்கும். கரைச்சி குடிச்சிட்டு ஸ்கூலுக்கு ஓடுவேன். அம்மா சொல்லுவாங்க, “மதியம் வீட்டுக்கு வந்திடுடா போங்கி வச்சிருப்பேம்பா” வீட்டுக்கு வந்தா அப்பதான் ஒல கொதிச்சிகிட்டு இருக்கும். …… (நாஞ்சில் நாடன்)