இந்தக் கட்டுரையின் தலைப்பு இளங்கோவடிகளின் வரி, மதுரைக் காண்டத்து வழக்குரை காதையில் காணப்படுவது.
பாண்டியன் நெடுஞ்செழியன் கூற்று.
“யானோ அரசன்! யானே கள்வன்!
மன்பத காக்கும் தென்புலம் காவல்!
என் முதல் பிழைத்தது: கெடுக என் ஆயுள்”
என மயங்கி விழுந்து உயிர் நீக்கும் இடம்.
இங்கெருவரும் எத்தனை மாபெரும் பிழை, நீதிக்கு அடுக்காத குற்றம் நிகழ்ந்தாலும் மயங்கி விழுந்து மாய்வதில்லை.
ஆண்ட அந்த இனம் அருகிப் போயிற்று, அல்லது அழிந்து போயிற்று.
எனவே என்ன செய்வோம் நாம்?
மன்பத காக்கும் தென்புலம் காவல்,
ஆம்! தமிழ்நாட்டை கடவுள் காக்கட்டும்!