வணக்கம்
கோவையில் மாலதி பதிப்பகம் மற்றும் பவித்ரா பதிப்பகம் என்ற பெயர்களில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் தேர்ந்தெடுத்த கட்டுரைகளைத் தொகுத்து “அக்கம்சுருக்கேல்” புத்தகம் வெளியிட்டுள்ளோம்.அதன் வெற்றியைத் தொடர்ந்து நாஞ்சில்நாடன் அவர்களின் சீரிய கட்டுரைகள் மாணவர்களைச் சென்றடையும் நோக்கில் மாணவர் பதிப்பாக வெளியிட்டு, இதுவரை சுமார் 3000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்தப் புத்தகத்தை மாணவர்களுக்கும் மற்றும் பலதரப்பட்ட மக்கள் வீட்டு விசேசங்களில் பரிசளிக்கவும் கொடுத்து வருகிறோம் .
ஒரு புத்தகம் ரூபாய் 100 என்கிறவகையில் 25,50,100 எண்ணிக்கைகளில் (SPONSERS) பொருளுதவி பெற்று பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறோம் .
தாங்கள் திரு நாஞ்சில்நாடன் அவர்களின் வலைத்தளத்தில் மாணவர் பதிப்பு பற்றிய தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
பிரகாஷ் ஜி ஆர்
பவித்ரா பதிப்பகம்,
24-5,சக்திமஹால்,
சின்னம்மாள் வீதி ,
கே கே புதூர் அஞ்சல் ,
கோவை 38.
94881 85920
99409 85920


