பக்கத்து ஊர் வி.ஓ.விடம் விண்ணப்பம் போயிற்று. அவருக்குத் தெரியும் கும்பமுனி சள்ளை பிடித்த எழுத்தாளர் என்று. தலைத்தட்டு வரை பிடி உள்ளவர் என்பதும் தெரியும். மேலும் எங்காவது நேர்காணலில் வில்லங்கமாகப் பேசிவைத்து அது மாவட்ட ஆட்சியாளர் கவனத்துக்குப் போய், களியந்தட்டு விளைக்கு மாற்றல் செய்தால் என்னவென்று எங்கு சென்று முறையிடுவது? மறுபடி ஒரு இடமாற்றத்துக்கு சந்தை நிலவரம் மூன்று இலக்கம் என்பதும் தெரியும்!