ஆல்தோட்ட பூபதி
நாஞ்சில் சார் மாதிரி கொஞ்சம் எள்ளல் கலந்து சொல்லியாகணும்னா:
வெயிலிலும் காற்றிலும் அவ்வப்போது கொட்டும் மழையிலும் இருந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அந்தக் கட்டிடத்தைத் தாங்கி வரும் முழுக்க துருவேறிய தகரக் கூரைகள்.அது இறங்கும் இடத்தில்தான் இருந்தது மில்லின் முதல் கேட். அதன் அருகே, அப்பனே காட்டடா என வயிற்றில் சிவனே வந்து பட்டை போட்டுவிட்டது போல, வறுமைக் கோடுகள் வரி வரியாய் மறைந்திருக்க, ஐஸ் விற்றுக்கொண்டிருந்தான் அணஞ்சபெருமாள். எர்வாமேட்டின் எடுக்கப் போய் அழிந்த அமேசான் காடுகளைப் போல, ஆங்காங்கே கொட்டிப்போன முடிகள்.
மிச்ச ஒரு ரூபாய்க்கு சாக்லெட் தரும் இந்த ஜனநாயக சோஷலிச நாட்டில், அந்த ஒரு ரூபாயை யார் கொடுத்தாலும் கிடைக்கும் குச்சி பால் ஐஸை வாங்கி, நஞ்சுண்ட பாம்பின் இரு கொம்பு வேல் போன்ற மெல்லிய நாக்கில் வைத்து சுவைத்தாள் ஆச்சியம்மே பேத்தி நாச்சியம்மே. முகம் கழுவிய பின்னும் நெற்றியில் இளஞ்சிவப்பில் மிச்சமிருக்கும் உறையூர் வெக்காளியம்மன் கோயில் குங்குமத்தைப் போல சிவந்த நிறம் கொண்ட மூக்கில் ஒட்டிக்கொண்டிருந்தது ஐஸ்கிரீம். அதனை நாய் நக்குமோ, பேய் நக்குமோ, இல்லை பனியால் வந்த ஜலதோஷ நோய் நக்குமோ…
http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8713&id1=9&issue=20150511