வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதன்று

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதாக இல்லை என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தெரிவித்தார்.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கன்னியாகுமரி புத்தகத் திருவிழா கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு கலை பண்பாட்டுத் துறையின் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு சார்ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமை வகித்தார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சொல்லும் கவியும் என்ற தலைப்பில் பேசியது:
புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இப்போது குறைந்து வருவது ஆரோக்கியமானதாக இல்லை. 1972இல் நாவல், சிறுகதை 1,200 பிரதிகள் அச்சிடப்பட்டன. சில நேரங்களில் இரண்டாம் பதிப்பு செய்து விற்பனையும் செய்யப்பட்டன. அப்போது தமிழகத்தின் மக்கள்தொகை சுமார் 3 கோடி.

40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மக்கள் தொகை 7 கோடியைத் தாண்டிவிட்டது. இப்போது நாவல், சிறுகதைகள் 500 பிரதிகள்தான் அச்சிடப்படுகின்றன. கவிதை நூல்களாக இருந்தால் 250 பிரதிகள் தான் அச்சிடப்படுகின்றன. இதை ஒப்பிடும்போது இப்போது வாசிப்புப் பழக்கம் எப்படி குறைந்துள்ளது என்பது தெரியும். மலையாள நாவல்கள் குறைந்தது 30 ஆயிரம் பிரதிகள் அச்சாகின்றன.
சென்னை, ஈரோடு, கோவை மாவட்டங்களை ஒப்பிடும்போது, தென்மாவட்டங்களில் சமீபகாலமாகத்தான் புத்தகக் கண்காட்சிகள் அறிமுகம் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியர்கள் வாசிப்புப் பழக்கத்தை கொண்டுள்ளதால் அவர்களின் முயற்சியால் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்திய ஒரு காலம் உண்டு. ஆனால் இன்று பல இடங்களில் நூலகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இது மிகவும் வேதனை தருகிறது.
வாசிப்பு ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தவேண்டும். வாசிப்புப் பழக்கம் இருந்தால்தான் புதிய சொற்களை நம்மால் தெரிந்து கொள்ளமுடியும், புரிந்து கொள்ளமுடியும். தமிழகத்தில் குறைந்து வரும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் பயன்படும். அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் பெறுவதற்கு மட்டும்தான் கல்வி என்று நினைக்கக் கூடாது என்றார்.
தமிழில் புனைகதை இலக்கியம் என்ற தலைப்பில் வார்ஸா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் தமிழவன் பேசினார். முன்னதாக குலசேகரம் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவக் கல்லூரி முதல்வர் பத்மகுமார் வரவேற்றார். நாகர்கோவில் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஐ. சிம்சன் நன்றி கூறினார்.
நாகர்கோவில் 19 August 2014

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதன்று

  1. harisarma14 சொல்கிறார்:

    Nanjil nadan sonnathu mikavum sari.Inru vaarapathirikaikalai etuththukkondalkuta thunukkukalukkuththan mukkiyaththuvam.En kuzganthai paruvaththil kalki vikatan muthaliya paththirikaikal engalukku thspaalil varum. Ker

    alavil banfal iruntha kiramatgthil post office kuta kitaiyathu. Irandu mile thuratthilulla post officekku poi ovvoru vellikkizhamaiyum poi vangi vazhiyileye patoththuvittu varuvom avvalavu aarcam inrayanilai parithaam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s