நெல்லைத் தூற்றி, சண்டு சாவி நீக்கினால்தான் அதற்க்கு மரியாதை. சண்டு எனில் பதர் எனலாம். ‘மழை’ பாடலில் பாரதி, ‘வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்’ என்று பாடுவதன் சரியான பொருள் எவரும் சொல்லுங்கள் ஐயா!மிளகாய் வற்றலில் சண்டு வற்றல் எனத் தரம் குறைந்த அயிட்டம் உண்டு. அது விலை குறைவானது. சாவி என்பதோ உள்ளீடற்றது. மறுபடி ஒரு திருக்குறள். பயனில சொல் அதிகாரம். குறள்- 196
‘பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல்’
பயன் தராத சொற்களைக் கொண்டாடுகிறவனை மனிதன் என மதிக்காதே. மக்களில் சாவியாக நினைத்து விலக்கு என்பது பொருள். எனவே சாவி எனில் பதடி. இதற்க்கு சில எடுத்துக்காட்டுகள் தரலாம். ஆனால் பகை வந்து சேரும். பொதுவாகவே, நம் தீப்பேறு, நம்மில் சொல் பாராட்டுவோரில் நெல் மணிகள் குறைவு, சாவிகள் அதிகம்.
——————–நாஞ்சில்நாடன்.
எங்க பக்கம் (தஞ்சை, திருவாரூர், நாகை) சாவியை, பதடியை ‘கருக்கா’ என்றே விவசாயிகள் சொல்வார்கள். ‘காத்து ஓடும்போதே கருக்கா தூத்துறது’ வழக்கம். கட்டுரையில் இதையும் எதிர்பார்த்தேன். ஏனெனில் இச்சொல்லை வள்ளுவர் உபயோகிக்கிறார்.
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
மு.வ உரை :
பெரும்பிணக்கும் சிறுபிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
Just wanted to emphasise this, the idea of scan and post it as a blog is very wrong. Search engines will never be able to index this content. Naanjil ayyya, you should post your blog posts as textual contents