நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி

Nammazhvar3
February 24, 2014  xlogo.jpg.pagespeed.ic.Y8kjeu2ob9“சுற்றுச்சூழலுக்கும், குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பை அறுந்து விடாமல் பாதுகாப்பது நாம் நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்” என எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு புகழஞ்சலி கருத்தரங்கம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  நம்மாழ்வாரின் படத்தை திறந்து வைத்து எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசியதாவது:
நவீன விஞ்ஞான கல்வியைக் கற்று தொழில் மூலமாக விஞ்ஞானி பணியை செய்து, நாம் தவறான வேலையைச் செய்கிறோம் என புரிந்து, அதனை விட்டு இயற்கை விவசாயத்திற்கு மாறியவர் நம்மாழ்வார். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே அதிகம் பயன்படுத்த வேண்டுமென்று கூறிவந்த நம்மாழ்வார், வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென போராடியவர்.
வெளிநாட்டினர் தங்களது வியாபார உத்திக்காகவே தவறான காரணங்களைக் கூறி பொருட்களை விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக, தேங்காய் கொழுப்பு என்று கூறி அதனை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கூறினர். ஆனால், கேரளாவில் சமீபத்தில் நடந்த ஆய்வில், தேங்காய் மூலம் வியாதிகள் ஏற்படும் என்பது தவறானது என தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் குறித்து தற்போது விழிப்புணர்வு பெருகியுள்ளது. நான் கட்டுரை மற்றும் கதைகளில் சுற்றுச்சூழல் குறித்து எழுதி வருவதற்கான ஆதார அறிவை நம்மாழ்வார்தான் வழங்கினார்.
நம்மாழ்வாருக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்றால் பாடத்திட்டத்தில் இல்லாத சுற்றுச்சூழல் குறித்த கல்வியை குழந்தைகளை சென்று சேரும் வகையில் இணைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கும், குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பை அறுந்து விடாமல் பாதுகாப்பது நாம் நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, நம்மாழ்வாரின் வேளாண் கல்வி என்ற தலைப்பில் குமாரவேல், நம்மாழ்வாரின் பணியில் பசுமை அங்காடிகள் என்ற தலைப்பில் ஜெகதீசன் உள்ளிட்டவர்கள் பேசினர்.

About S i Sulthan

தொகுப்பு
Gallery | This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s