ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது

6238_436397343076459_826304063_n

(தலைப்பு நாஞ்சில் நாடனுடையது அல்ல)
இன்று ஒன்று நன்று  
(விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)
     விகடன் வாசகர்களுக்கு வணக்கம்.
  நாஞ்சில் நாடன் பேசுகிறேன்!
     முன்பு, சிறு வயதில் எப்போதோ வாசித்த ஞாபகம்.  வெளிநாட்டு நகரம் ஒன்றில், ஒரு நாள் இரவு முழுக்க மின்சாரம் தடைப் பட்டிருந்ததாம்.  பின் வந்த 270 நாட்களில் குழந்தைப் பேறு வழக்கமாக அதிகரித்திருந்ததாம்.
     எனில்,  இனிமேல் தமிழகத்தில் குழந்தைப் பேறு விரைந்து அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.  அப்படி இருக்கிறது மின் வெட்டின் தன்மை.  கோவை மாநகரில் இப்போதெல்லாம் தினசரி 14 மணி நேரம் மின்வெட்டு.  இரவில் 1 மணிக்கூர் மின்வெட்டு – 2 மணிக்கூர் மின்சாரம் – மீண்டும் 1 மணிக்கூர் மின்வெட்டு – 2 மணிக்கூர் மின்சாரம் என்பது விடியும் வரை அட்டவணை.
     படிக்கிற பிள்ளைகள், பணிக்குச் செல்வோர், நோயாளிகள், குழந்தைகள்…  என்ன செய்ய இயலும்?
மின்சாரம் மரத்திலா காய்க்குது?  என்னிடம் ஒரு நண்பர் கேட்டார், தினசரி 14 மணி நேரம் மின்வெட்டு ஐயா?
நான் திருப்பிக் கேட்டேன் 24 மணி நேரமும் மின்வெட்டு இருந்தால் கூட நீங்கள் என்ன செய்து விடுவீர்கள்?
     தொழிற்சாலைகள் கேட்கின்றன, குடுப்பதைத் தொடர்ச்சியாகக் கொடுங்கள், ஒரு ஷிஃப்ட் ஒழுங்காக ஓட்டுகிறோம் !
     மருத்துவமனைகள் சொல்கின்றன, அறுவை சிகிச்சை, ICU எல்லாம் சிரமமாக இருக்கிறது.
     சாலை சிக்னல்கள் செயல்படுவதில்லை.
     நினைத்த நேரத்தில் ஒரு ஜெராக்ஸ் எடுக்க முடியாது.
     உணவகங்களும் இல்லத்தரசிகளும் சொல்கிறார்கள் குளிர்சாதனப் பெட்டி உணவுகள் கெட்டுப் போகின்றன.
     நிறையப் பேருக்கு மகா சீரியல்கள் தொடர்பற்றுப் போகின்றன. செல்ஃபோன் சார்ஜ் செய்ய முடியவில்லை
     கோவைத் தொழிலதிபர்கள் கேட்கிறார்கள், அதென்ன சென்னைக்கு மட்டும் தினசரி ஒரு மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 14 மணி நேரம்.  சென்னை என்ன Special Kashmir Status ஆ?
அவர்கள் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. கோவை நகருக்கே இந்தக் கதியானால் கன்னியாகுமரி மாவட்டத்து, தோவாளை வட்டத்து,  தாழக்குடி பேரூராட்சியின் கிராமமான வீரநாராயணமங்கலத்துக்கு என்ன கதி?
     புள்ளி விவரங்கள் பயமுறுத்துகின்றன.  தமிழ்நாட்டின் மொத்த மின்சாரத் தேவை 11500 மெகாவாட்.  தற்போதைய உற்பத்தி 6500 மெகாவாட், அதில் சென்னைக்கு மட்டும் 2000 மெகாவாட்.  மிச்சம் மீதித் தமிழ்நாட்டுக்கு !
     கூடங்குளம் செயல்பட்டால் விடிந்து விடும் என்று மக்கள் நம்புகிறார்கள்.  கூடங்குளம் எத்தனை மெகாவாட் உற்பத்தி செய்யும்?  அதில் சொந்தப் பயன்பாடு எத்தனை?  மிச்சம் தமிழ் நாட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்?  யாமறியோம்…
மழை பொய்த்துப் போனது,  எனவே அந்தப் பங்கு மின்சாரம்,  புனல் மின்சாரம் கிடைக்காது.
     அனல் மின்சாரமோ எனில், எந்த யூனிட்டும் முழுத் திறனில் உற்பத்தி செய்யவில்லை.
     அணுமின் நிலையம் கல்பாக்கம் முழுத்திறன் எவ்வளவு,  எவ்வளவு கிடைக்கிறது?
     காற்றடித்தால் காற்றாடிகள் சுற்றும் இல்லையேல் இல்லை.
     சரி, இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, 2025 – ல் தமிழகத்தின் தேவை என்னவாக இருக்கும்?
     அதை எப்படி அடையப் போகிறோம்?
     அதற்கான திட்டங்கள் என்ன?
     ஒன்று பொய்த்தால் மற்றொன்று செயல்பட மாற்றுத் திட்டங்கள் என்ன?
     யாருக்குத் தெரியும்?
     ஆனால் மின்சார வாரிய அதிகாரிகளுக்கோ இறை நம்பிக்கையும் ஆன்மீக ஈடுபாடும் அதிகம்.  கோவையில் ஒரு யோக,  தியான மையத்துக்கு இடைவிடாத 24 மணி நேரம் மின்சாரம் வழங்குகிறார்கள்.
     வெளி நாட்டு முதலீட்டுக் கம்பெனிகளுக்கும் இந்த சலுகை உண்டு.
     நாமென்ன, சாதாரண குடிமக்கள் தானே!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தட்டச்சு உதவி: பிரவீன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இன்று ஒன்று நன்று and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அதென்ன சென்னைக்கு மட்டும் தினசரி ஒரு மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 14 மணி நேரம். சென்னை என்ன Special Kashmir Status ஆ?

  நிஜம் தான். அருமையான பதிவு. மின்சாரம் வருவது மின்னலைப் போல் இருக்கிறது. கிரிக்கெட் மேச் இருக்கும் நாளன்று மின்சாரம் இருக்கிறது. மக்களுக்கு வாழ்வாதாரம் முக்கியமா? கிரிக்கெட் முக்கியமா?

  இதற்கு பதில் அரசாங்கத்துக்கும், ஆண்டவனுக்கும் தான் தெரியும். யாரும் பதில் சொல்லப் போவதில்லை.

  நன்றி ஐயா.

 2. மின்தடையால் நல்ல விசயம் என்னவென்றால் இப்பவெல்லாம் வானில் நிலா மற்றும் நட்சத்திரங்களைப் பார்க்க முடிகிறது. மின்சாரம் இருந்தால் தொலைக்காட்சியில் திரை நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருப்போம்.

 3. தமிழ்ப் புதிர்கள் சொல்கிறார்:

  எங்கு, எப்படி எவ்வாறு மின்சாரத்தை சேமிப்பது என ஒரு தெளிவான வழிகாட்டல் குறைவே. மின்னழுத்தத்தை குறைப்பது எப்படி, ஒரு வீட்டில் மோட்டார், ஹீட்டர், அயர்ன் பாக்ஸ் மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா? சிக்கனமாக இருப்பதால் வேறு ஏதேனும் இன்சென்டிவ் உண்டா என்பதெல்லாம் அரசு ஆராயவேண்டும். ரேஷன் போல மின்சாரத்தைத் தரவேன்டும், ஆட்கள் எண்ணிக்கைக்கேற்ப, ஆனால் தரவேண்டும். உபரியாகப் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு (முக்கிய புள்ளிகளுக்கு காந்தி சொன்னது போல அதிகபட்சமாக ஒரு பத்து மடங்கு அதிக மின்சாரம், சொகுசு வரியுடன்). சொகுசு வரி விதித்தும், அங்கு மட்டும் ஒரிரு நாட்களுக்கு மின்சாரத்தைத் துண்டித்தும் வரைமுறைப்படுத்தலாம். மின் தேக்கிகளுக்கு (அதாங்க UPS battery) தடை அல்லது லைசென்ஸ் கொண்டும் வரலாம் (இவை 20% அதிக மின்சார விரயம் தருபவை).. இரவு நேரக் கடைகளை வரைமுறைப்படுத்தினால் (பாதிகடைகள் மட்டும் ஒரு நாள் இரவு, மீதிக்கடைகள் மறுநாள் இரவு, சூரிய ஓளியில் திறந்து சூரிய ஒளியில் மூடுதல், இயற்கை வெளிச்சம் பயன்படுத்தா கடைகளுக்கு அதிக வரிகள்.. இந்த நடைமுறைகளால் ஒரு எண்பது சதவிகிதம் மக்களுக்கு போதுமான மின்சாரம் 80% நேரம் கிடைத்துவிடும். அதிகம் பயன்படுத்தும் இருபது சதவிகிதத்தினரே 80% மின்சாரத்தைப் பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்படும்.

  • Ravikumar சொல்கிறார்:

   we suppose to plan for more natural way of electricity sources, other then we can not survive atleast, as you said if the shops allowed to open in the days only, who will buy (can only be unemployed people), so we are need to segrigate all the resources to overcome. I am in outside of india but i like the way of delivery of Mr. Nanjil Naadan avargal. i could feel as being in india in the current (?) situation. Thanks a lot for your Tamil service sir. (i couldnt type in tamil sorry).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s