இன்று… ஒன்று… நன்று!

               
நாஞ்சில்நாடன்
விகடன் வாசகர்களுக்கு வணக்கம்…
‘இன்று… ஒன்று… நன்று!’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே… நமக்குள்ள பரிமாறிக்க!
 நம்ம சந்ததிகள் நல்லா இருக்கணும், எல்லா வளங்களும் பெறணும்னு ஆசைப்படுறோம். அதுக் காக அவங்க மேல அன்பு, பாசம், கரிசனம், நட்பு எல்லாம் கொட்டுறோம். நம்ம பிள்ளைகுட்டிக நல்லா இருக்கணும்னா, அவங்ககிட்ட மட்டும் இல்லை, தாவரங்கள்கிட்டேயும் பாசம் காட்டணும். தாவர நேசம்னா என்ன, அந்த நேசம் ஏன் அவசியம்னு கொஞ்சம் பேசலாம்.
சமீபத்துல அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு 50 நாட்கள் பயணம் போயிருந்தேன். அங்கே நான் பார்த்த ‘ரெஸ்ட் ப்ளேஸஸ்’னு ஒரு விஷயம் ரொம்பவும் ஆச்சரியப்படுத்துச்சு. ஒருவித வயித்தெரிச்சலோடு நான் வியந்து பார்த்த அம்சம் அது. ஏன் எனக்கு அந்த வயித்தெரிச்சல்… வியப்பு? அது நிச்சயம் நம்ம நாட்டுக்கு அவசியம். அதைப் பத்தி தெரிஞ்சா நீங்க ளும் ஆதரிப்பீங்க.
உலகத்துக்கே பெரிய பிரச்னை தண்ணீர் பிரச்னை. ‘காடுகளை  அழிக்கிறதுதான் காரணம்… அழிக்காதீங்கப்பா’னு சொல்லிட்டு நம்ம கடமை முடிஞ்சதா நினைக்கிறோம். ஆனா, தண்ணீரை மிச்சப்படுத்துறதும் நம்மோட கடமைனு உணர்ந்திருக்கோமா? நீர் மேலாண்மை தமிழர்கள் அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு சங்கதி. எப்படி எல்லாம் தண்ணீரைப் பயன்படுத்தலாம்… எப்படி எல்லாம் பயன்படுத்தக் கூடாதுனு உங்களுக்குச் சொல்றேன்.
சாப்பிடுற சாப்பாடு, உடுத்துற உடைகள், அலங் காரம்னு எல்லாத்துலயும் புதுப்புது விஷயங்களைத் தேடுறோம். ஆனா, நம்ம தாய்மொழியான தமிழில் மட்டும் பேச்சுவழக்கில் இருக்கிற நல்ல வார்த்தை களைக்கூடப் புறக்கணிக்கிறோம். நாம எப்படிப் பேசணும்… தமிழ் மொழியின் சிறப்பு என்ன? வாங்க, கொஞ்சம் பெருமை பேசலாம்!
11.10.12-ல் இருந்து 17.10.12 வரைக்கும் 044-66808034 என்ற எண்ணில் கூப்பிடுங்க. நிறைய நிறைய நல்ல விஷயங்களைப் பகிர்ந்துக்கலாம்.
அழைப்பின் மகிழ்வில்,
நாஞ்சில் நாடன்
 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடன் கதைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இன்று… ஒன்று… நன்று!

  1. Naga Sree சொல்கிறார்:

    ஆவலுடன் காத்திருக்கிறோம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s