ஆண்டுவிழா 2012 – சிறப்பு விருந்தினர் விவரம்
Our school’s annual day will be held on June 9th. Please invite your friends and relatives
https://www.valluvantamil.org/index.php/announcements
நமது பள்ளியாண்டு விழாவில் பிரபல தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் நம்முடன் கலந்து கொள்கிறார்.
சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் தலைகீழ்விகிதங்களை இயக்குநர் தங்கர்பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது
நாஞ்சில் நாடன் குறித்து மேலும் அறிய:
1. விக்கிபீடியா
2. நாஞ்சில்நாடன்.காம்
3. சொல்வனம்
4. தமிழ் ஹெல்ப்
5. ஜெயமோகன்
இணையதளங்களை அலசவும்.