ஈரோடு சந்திப்பு

 

(சொல் புதிது ஜெயமோகன் இணைய குரூப்பில் இருந்து)

ராதா கிருஷ்ணன் 

ஈரோடு வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த தமிழ் மரபிலக்கியம்பற்றிய (நாஞ்சில் நாடன்) இருநாள் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்புகிடைத்தது .முதல் நாள் இரு அமர்வாக மரபிலக்கிய அறிமுக வகுப்புகளாகவும் மறுநாள் நாஞ்சில் நாடனுடன் பங்கேற்போர் உரையாடும் நிகழ்வாகவும் நடை பெற்றது.
இந்நிகழ்வில் கோபாலகிருஷ்ணன்(சூத்ரதாரி) மோகன ரங்கன் போன்ற இலக்கிய ஆளுமைகளும்
பங்கெடுத்தனர் .
நாஞ்சில் போன்ற ஆளுமை இது போன்ற வகுப்புகளை எடுக்கும் போது அவர்
சென்ற உச்சத்தினை நாமும் காண முடியும் என்பதை அனுபவித்து உணர்ந்தேன் ,  மேலும்
உதாரணமாக அவர் பெரியாழ்வார்  பாடல்களை எடுக்கும் போது அவர் மற்ற
ஆழ்வார்களிடமிருந்து  எப்படி வேறுபடுகிறார் அதிலிருந்து ஆண்டாள் கதையையும் தன்
நோக்கில் அவளுக்கு என்ன முடிவு நேர்ந்திருக்கும் எனவும் சொல்லி செல்கிறார்
மேலும் தன் நோக்கில் ஆழ்வார்களை வரிசை படுத்துகிறார் அவரது தேர்வு முறை பக்தி
சாராத இலக்கியத்தை முன்னிறுத்திய வழியாக இருந்தது,மரபிலக்கியம் முழுவதிலும்
தேர்ச்சி பெற்ற ஒருவரின் கீழ் மரபிலக்கியம் பயில்வதன் முக்கியத்துவம் இவர்
மூலம் உணர முடிந்தது
இருநாள் முழுவதும் கலந்து கொண்டிருந்த அனைவரிடமும் மாறி மாறி
உரையாடி கொண்டே இருந்தார் ,முதல் நாள் இரவு நவீன கவிதை பற்றிய விவாதம்
நிகழ்தது ,நாஞ்சிலுக்கு நவீன கவிதை தன் மூதாதைகளின் செல்வத்தை(குறிப்பாக
வார்த்தைகளுக்கிடையே முயங்கும் ஓசை) விட்டு பிரிந்து புதிதாக மலர முயன்றது
பிடிக்க வில்லை இதுநாள் வரையும் நவீன கவிதை அதனால் சாதித்தது ஒன்றுமில்லை
என்றார் அதற்கு பதிலாக கவிஞர் மோகனரங்கன் ராஜமார்த்தண்டனின் நூலை முன்வைத்து
அதிலிருந்தும் தன் தரப்பாக முப்பது கவிதைகளை கழிக்க முடியும் என்றும்
அப்போதும் குறைந்தது நூறு நல்ல கவிதைகள் தேறும் என்றும் மரபிலக்கியத்தின்
ஆண்டுகளை கொண்டு பார்க்கும் போது நவீன கவிதைகள் 75 ஆண்டுகளில் நூறு நல்ல
கவிதைகள் என்பது சாதனைதான் என்றார் .
இந்நிகழ்வில் கோபால கிருஷ்ணன் அவர்களை சந்தித்தது மகிழ்வை
ஏற்படுத்தியது ஏனெனில் அவர் எழுதிய நித்திய சைதன்ய யதியின் ஈசா வாஷ்ய
உபனித்(எளிய அறிமுகம்) ஏற்கனவே வாசித்திருந்தேன் ,அவரிடம் நிறைய உரையாடும்
வாய்ப்பு கிடைத்தது அவர் முன்பு சொல்புதிது இதழிற்கு ஆசிரியர் ஆக இருந்தார்
என்ற தகவல் ஆச்சிரியம் அளித்தது .
இருநாளும் நாஞ்சிலை கவனித்தபடியே இருந்தேன் அவருடன் காரில் அவர்
வீடு வரும் வரையிலும், என் நண்பர்கள் இலக்கியம் படிப்பதால் என்ன பயன் என்று
கிண்டலடிப்பார்கள் அதை நான் பொருட்படுத்தியதில்லை , இப்போது இலக்கியம் ஒருவரை
எங்கு கொண்டு செல்லும் நாஞ்சில் மூலம் கண்டேன் அவர் நான் என்பதை இப்பிரபஞ்சம்
முழுவதும் விரித்து கொள்கிறார் சிறு உதாரணம் நாங்கள் வரும் வழியில் (பல்லடம்
வழி) ஒரு இனிப்பு பலகார கடையில் ஒப்பிட்டு மிக நன்றாக இருக்கும் முன்பு
வாங்கி இருக்கிறேன் அங்கு போகலாம் என்றார் முன்பு அவர் பார்த்த சிறுகடை பெரிய
வளர்ச்சி அடைந்திருந்தது அதை பார்த்து மிக ஆனந்தபட்டார் உண்மையில் அக்கடை
உரிமையாளரே அந்தளவு சந்தோசப்பட்டிருப்பாரா என்ற அளவிற்கு இருந்தது அவரின்
மகிழ்வு . அவரால் மிக எளிதாக குழந்தையின் மன நிலைக்கு செல்ல முடிகிறது
முக்கியமாக உணவை பற்றி பேசும் சமயங்களில்  ,மேலும் அவர் பேசும் போது பற்று
சார்ந்த விருப்பம் இப்போது குறைத்து வருவதாக கூறினார் (உலகம் முழுதும் அலைந்த
பின் நம் வீடு அழகாக தெரிவது போல) இலக்கியம் நம்மை அழைத்து செல்லும் பாதை
இதுதான் இலக்கிய நூல்கள் தியான மந்திரங்கள் போல நம்மை அங்கு கொண்டு
செல்கின்றன விஸ்ணு புறம் நூலின் கொடை அதுதான் பல நூறு வாழ்வுகள் மூலம் நம்மை
பெரும் தூரம் அழைத்து சென்று விடுகிறது  என் வரையில் இந்நூல் மட்டுமே போதும்
கூட என்று சொல்வேன் அந்நூல் சொல்லாத உணர்வுகளே இல்லை( வெற்றிக்கு பின் வரும்
வெறுமை கூட).
நாஞ்சிலின் சிரிப்பில் களங்கமற்ற தன்மை நிரம்பியிருந்தது நான் செல்ல
விரும்பும் இடமும் அதுதான்,இது போன்ற வாய்ப்புகளை உருவாக்கிதரும் கிருஷ்ணன்
மற்றும் அவரின் குழுவிற்கும் என் நன்றிகள் 


சுனீல் கிருஷ்ணன்

அன்புள்ள ராதா ,
அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.ஊட்டியில் நாஞ்சிலாரை சந்தித்த பொது ,அவருடைய
ஒரே ஒரு கட்டுரை தொகுப்பு ( நதியின் பிழை..) மட்டுமே வாசித்திருந்தேன்,அவரிடம்
சென்று அறிமுகம் செய்துக்கொண்டு பேச தயக்கமாக
இருந்தது.இறுதிநாளில்,கிளம்புவதற்கு முன்பு அவரிடம் ஒரு பத்து நிமிடங்கள்
பேசினேன் ,அதுவும் அவர் ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் எழுதிய உணவே மருந்து
புத்தகத்தின் முன்னுரையை பற்றி, அவளவு தான் .
பின்னர் சுல்தான் பாய் புண்ணியத்தில் ஊருக்கு திரும்பியவுடன் அவருடைய சில
கதைகளை வாசித்தேன், இங்கு நடந்த புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கு
பெற அவர் வருவதாக அழைப்பு வந்தது.அரங்கரிடமிருந்து எண்ணை பெற்றுக்கொண்டு
பேசினேன் ,மறுநாள் முழுவதும் அவருடன் இருந்தேன், அவரோடு நானும் பா.நமசிவாயம்
அய்யா வீட்டிற்கு சென்றோம்,இருவரும் கம்பனின் பாடல்களை பற்றி மாறி மாறி
பேசிக்கொண்டிருந்தார்கள் அந்த ஒன்றரை மணிநேரம் மறக்கமுடியாத அனுபவம்..வரும்
வழியில் பல விஷயங்களை பற்றி பேசிக்கொண்டே வந்தார்.
சாதரணமாக எதையும் கேட்டு புரிந்துகொள்வதை காட்டிலும் வாசித்து புரிந்துகொள்வதே
எனக்கு சரியாக வரும் என்று நம்பிக்கையில் இருந்தேன், ஆனால் அதை ஜெ, நாஞ்சில்-
இருவரும் அதில் உண்மையில்லை என்பதை உணர்த்திவிட்டார்கள், அவர்களுடன்
நேரில் உரையாடிய அனேக விஷயங்கள் அப்படியே நினைவில் உள்ளது.
ஜெ வோடு இருந்த சமயங்களிலும் சரி நாஞ்சிலாரோடு இருந்த சமயங்களிலும் சரி-
இலக்கியம் அளிக்கும் சமநிலை என்பது எழுத்தில் மட்டும் உள்ள ஒன்றல்ல, அதை
தாண்டி ஆளுமையில் ஓர் சமநிலையும் அமைதியும் கைகூடிய நிலை என்பதை
உணர்ந்தேன்.அந்த சமநிலையே எழுத்தில் பிரதிபலிக்கிறது .. 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ஈரோடு சந்திப்பு

 1. Naga Sree சொல்கிறார்:

  “நாஞ்சிலின் சிரிப்பில் களங்கமற்ற தன்மை நிரம்பியிருந்தது”-
  பகிர்வுக்கு நன்றி

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை ஐயா.
  நன்றி.

 3. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  இனிய பகிர்வுக்கு நன்றி.மதுரையில் இந்த மாதிரி ஒரு வாயப்புக் கிடைத்தால்
  மிக நன்றாக இருக்குமே என்று ஏக்கமாக உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s