மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் சமீரா மீரான்
– வதிலை பிரதாபன் ,செயலாளர், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
தமிழ் இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமது ‘சூடிய பூ சூடற்க ‘ என்னும் சிறுகதை தொகுப்புக்காக கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினை பெற்றார். தமிழ் நாட்டில் பல இடங்களில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மும்பைத் தமிழ் சங்கமும் மும்பையின் பிற தமிழ் அமைப்புகளுடன் இணைந்து விருது பெற்ற நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா நடத்தியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ( பிப் 12, 2012 ) மாலை 7 மணியளவில் மும்பை தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்ற இப்பாராட்டு விழாவில் மும்பைத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், மும்பை தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கு மும்பைத் தமிழ்ச் சங்கத் தலைவர் என். ஜெயராமன் தலைமை தாங்கினார், செயலாளர் கவிஞர் பரணி வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் புதியமாதவி, கே. ஆர் மணி ஆகியோர் நாஞ்சில் நாடனின் படைப்புகள் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார்கள். மும்பை திமுக செயலாளர் த. மு. பொற்கோ, நவிமும்பைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கி. இராஜ கோபால், மும்பைத் தமிழ்ச் சங்க செயலாளர் வெ. பாலு, மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான், தமிழர் நட்புறவுப் பேரவைத் தலைவர் கவிஞர் குணா, கோரேகான் தமிழ் சங்க நிர்வாகி கே. ஆர். சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவை அமைப்பாளர் சாந்தாராம் சேட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மும்பைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் இராமதாஸ் தமிழ் சங்கத்தின் சார்பாக வாழ்த்து மடலை படித்தளித்தார். விழாக் குழுவின் சார்பாக திரு.நாஞ்சில் நாடனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை எழுத்தாளர் சரவணன் தொகுத்து வழங்கினார். திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் ஏற்புரைக்கு பிறகு iகவிஞர் பரணி நன்றி கூறினார்.
படங்கள்
1 ) விழா மேடையில் திரு. த. மு. பொற்கோ, திரு. கி. இராஜகோபால், திரு. நாஞ்சில் நாடன், திரு. என். ஜெயராமன்.
2 ) திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக சிறப்பு செய்யப்படுகிறது. படத்தில் திரு. வதிலை பிரதாபன், திரு. சமீரா மீரான், திரு. நாஞ்சில் நாடன், திரு. பா. சங்கர நயினார்.
3 ) திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு ஜெரிமேரி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக சிறப்பு செய்யப்படுகிறது. படத்தில் கவிஞர் தமிழ் நேசன், திரு. நாஞ்சில் நாடன், திரு. இல. முருகன்.
4 ) திரு. நாஞ்சில் நாடன் படைப்புகள் குறித்து கவிஞர் புதியமாதவி ஆய்வுரை நிகழ்த்துகிறார்.
5 ) திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கோரேகான் தமிழ் சங்கதின் சார்பாக சிறப்பு செய்யப்படுகிறது. படத்தில் திரு. நாஞ்சில் நாடன் அவர்களுடன் திரு பால கிருஷ்ணன்
6 ) திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்குகவிஞர் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பாக சிறப்பு செய்யப்படுகிறது. படத்தில் திரு. சாந்தாராம் சேட், திரு. கி. இராஜகோபால், திரு. நாஞ்சில் நாடன்.

பெரிதும் மகிழ்கிறோம்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்!
அருமையானதொரு விழாவை நேர்ல பார்த்த உணர்வு..