புண்ணுக்கு மை அழகா?(3)

நடிகர்கள் நாட்டின் செல்வாக்குமிக்க அடையாளங்கள்.அவர்கள் சொன்னால்தான் எந்தபொருளும் விற்கிறது.எந்த ஆட்சியும் அமைகிறது. அவர்களோடு பழகுவதும் நட்பு பாராட்டுவதும் பல வழிகளில் உதவும். நாஞ்சிலார் சொன்ன மருத்துவரை தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? குண்டு கல்யானத்திலிருந்து சூப்பர் ஸ்டார் வரை அத்தனை நடிகர்களையும் தமிழ் மக்களுக்குத் தெரியும். தன் மகளின் பிறந்த நாள் தெரியாதவனுக்கு குஸ்புவின் பிறந்தநாள் தெரியும். சோற்றுக்கு வழியில்லாத பாமரத் தமிழனுக்குசந்தோசம் தரும் டானிக்காக இருந்தது – அது தோன்றிய காலம் முதல்! நல்லவர்கள் வல்லவர்களாகி இந்த நாட்டை நாசப் படுத்தவும் சினிமாதான் காரணமாக இருந்தது. நாஞ்சில் நாடனோடு படம் எடுத்துக் கொண்டால் யாருக்கும் தெரியாது.நடிகனோடு எடுத்துக் கொண்டால் நாட்டுக்கே தெரியும்.வருமானத்துக்கு தகுந்த வரிகட்டாத நடிகனெல்லாம் ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட ஹசாறேயின் மேடையில் ஊழலை ஒழிப்போம் என்று கோசம் போடுகிறான். கூட்டம் குதூகலிக்கிறது.மேடை நாயகன் முறுவலிக்கிறான்- தன் எதிரிகளுக்கு எதிரான மற்றொரு ஆயுதம்” தனக்கு கிடைத்திருப்பதை எண்ணி. ஊரை ஏமாற்றும் இந்த பொறுக்கிகளை மேடையில் வைத்தே செருப்பால் அடிக்கும் துணிவு பரிசுத்த ஆத்மாக்களுக்கு இல்லை. இதுதான் நம் நாட்டின் சாபக்கேடு.நாஞ்சிலார் நன்றாகத்தான் சொல்லி இருக்கிறார் – நல்ல மேய்ப்பர்கள் என்று……Abu Haashima Vaver
நாஞ்சில் நாடன் எழுதும் போது ஒன்றை மட்டும் விட்டு விட்டார்.ஒரு மருத்துவர் பற்றி உதாரணம் காட்டியுள்ளார். ஆனால் புலம் பெயர்ந்து வாழும் இடங்களில் இந்த திரைத்துறை பிரபல்யங்களை கண்டு அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான ரூபாய் கெ(கொ)டுத்து ஜென்ம சாபல்யம் அடைந்த பிரகஸ்திபதிகளை அவர் பார்த்து இருக்க மாட்டார் போல? எல்லா இடங்களிலும் தமிழர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த இடத்தில் தமிழர்கள் என்று மட்டும் குறிப்பிட்ட காரணம் நடிகர் நடிகைகளைப் பார்த்து விட்டால் ஏறக்குறைய சொப்பன ஸ்கலிதம் போன சுகம் போலத்தான் பாதிப்பேர்கள் இருக்கிறார்கள். இதில் மட்டும் படித்தவர் படிக்காதவர் என்ற பாரபட்சம் இல்லை…….ஜோதிஜி திருப்பூர்
முன்பகுதி: புண்ணுக்கு மை அழகா?புண்ணுக்கு மை அழகா(2)
                                                                                                          …………………..நாஞ்சில் நாடன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to புண்ணுக்கு மை அழகா?(3)

 1. hameed hamsha சொல்கிறார்:

  நாஞ்சிலார் ஆணியை நன்கு ஆழமாகவே அடித்துள்ளார்கள் ஆனாலும் அது உறைப்பவர்க்கு உறைக்குமா?

 2. Naga Sree சொல்கிறார்:

  இதை விட புத்தி கூறயாதுமில்லை.
  இதை படித்து சற்று  சிந்தித்தால்,
  இனிமேலாவது நமக்கு விடிவுண்டு. 

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி ஐயா.

 4. elavarasan சொல்கிறார்:

  அருமையான பதிவு
  நன்றி

 5. ashoksubra சொல்கிறார்:

  இரைச்சல் பழகிய மக்களிடம் இசையைப் பற்றி பேசுகிறார் நாஞ்சில் நாடன் அவர்கள். மெல்ல ஆனால் உறுதியாக சமூகத்தை எல்லா வேண்டாதவையும் ஆக்ரமித்துக் கொண்டுவிட்டன. உலகமே செல்லரித்தை உடலமாக, சடலமாக ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறது. ஊடகத்துக்கு ஊடாலதான் வாழ்க்கையேன்னு ஆகிற்று. சினிமாக்காரிகளையும், காரன்களையும் சமூகத்தைச் சீர்குலைக்க வந்த சீர்கேடிகள் என்று சமூகமே உணராத வரையில், ஒரு மைனாரிட்டி, கன்னத்தில் கைவத்து அலமந்து வலை இடுகைகளிலும், தனிக்கூட்டங்களிலும், புலம்புவதும் கூட ஒரு அடையாளம் தேடியோ என்று எண்ணவைக்கிறது. சமூகத்தோடு சோரம் போனபின், ஊசிப்போன ரசத்தில் ஒரு சொட்டுமட்டும் எப்படி ஒசத்தியாக இருக்கமுடியும்? கார்ல் ஸேகனின் அகன்று விரிந்த அண்டவெளியில் ஒரு வெளிர் ஒளிக்கீற்றின், ஒரு பொருட்டே இல்லாத வெளிர் நீலப் புள்ளியே நம்முலகம், இதிலே தான் இத்தனைக் கூத்துக்களும் என்கிற அளவில் 99.999… சதவிகித மக்கள் உணராமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருக்கிற வரையில், நமது ஆத்ம திருப்திக்கும், நம்மை இரசிப்பவர்கள் சிலருக்காகவும் எழுதலாம் பேசலாமே தவிர, மற்றபடி, டமார செவிடுகளில் ஊதப்படுகிற சங்கேதான் அத்தனை அங்கலாய்ப்பும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s