புண்ணுக்கு மை அழகா(2)

அவர்களன்றி வேறு யார் நம்மை வழி நட்த்த முடியும்? வேறு யார் கடைத்தேற்ற இயலும்?  ஆச்சார்ய வினோபா பாவே, பாபா அம்தே , மகாத்மா புலே, மகாத்மா காந்தி, பெரியார் என்றிவர் நம்மிடம் எந்த மாற்றமும் கொண்டுவர இயலவில்லை…. எனவே மந்தைகளாய் பின் செல்லுங்கள் மக்களே…..இவர்கள் நல்ல மேய்ப்பன்கள்…..மேய்ப்பிணிகள்…..கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவர்கள்…
நாஞ்சில் நாடன்
முன்பகுதி: புண்ணுக்கு மை அழகா?
தொடரும்….

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், திரைத் துறை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to புண்ணுக்கு மை அழகா(2)

 1. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  வணக்கம் சுல்தான்.

  ஸ்கேன் போல போடுவதை எழுத்தாக போட முடியாதா? பல இடங்களில் இந்த இரண்டு பதிவுகளையும் வெளியிட ஆசை.

  நாஞ்சில் நாடன் எழுதும் போது ஒன்றை மட்டும் விட்டு விட்டார்.

  ஒரு மருத்துவர் பற்றி உதாரணம் காட்டியுள்ளார். ஆனால் புலம் பெயர்ந்து வாழும் இடங்களில் இந்த திரைத்துறை பிரபல்யங்களை கண்டு அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான ரூபாய் கெ(கொ)டுத்து ஜென்ம சாபல்யம் அடைந்த பிரகஸ்திபதிகளை அவர் பார்த்து இருக்க மாட்டார் போல? எல்லா இடங்களிலும் தமிழர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த இடத்தில் தமிழர்கள் என்று மட்டும் குறிப்பிட்ட காரணம் நடிகர் நடிகைகளைப் பார்த்து விட்டால் ஏறக்குறைய சொப்பன ஸ்கலிதம் போன சுகம் போலத்தான் பாதிப்பேர்கள் இருக்கிறார்கள். இதில் மட்டும் படித்தவர் படிக்காதவர் என்ற பாரபட்சம் இல்லை.

  • Abu Haashima Vaver சொல்கிறார்:

   நடிகர்கள் நாட்டின் செல்வாக்குமிக்க அடையாளங்கள்.அவர்கள் சொன்னால்தான் எந்தபொருளும் விற்கிறது.எந்த ஆட்சியும் அமைகிறது. அவர்களோடு

   பழகுவதும் நட்பு பாராட்டுவதும் பல வழிகளில் உதவும். நாஞ்சிலார் சொன்ன மருத்துவரை தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? குண்டு கல்யானத்திலிருந்து சூப்பர் ஸ்டார் வரை அத்தனை நடிகர்களையும் தமிழ் மக்களுக்குத் தெரியும். தன் மகளின் பிறந்த நாள் தெரியாதவனுக்கு குஸ்புவின் பிறந்தநாள் தெரியும். சோற்றுக்கு வழியில்லாத பாமரத் தமிழனுக்குசந்தோசம் தரும் டானிக்காக இருந்தது – அது தோன்றிய காலம் முதல்! நல்லவர்கள் வல்லவர்களாகி இந்த நாட்டை நாசப் படுத்தவும் சினிமாதான் காரணமாக இருந்தது. நாஞ்சில் நாடனோடு படம் எடுத்துக் கொண்டால் யாருக்கும் தெரியாது.நடிகனோடு எடுத்துக் கொண்டால் நாட்டுக்கே தெரியும்.வருமானத்துக்கு தகுந்த வரிகட்டாத நடிகனெல்லாம் ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட ஹசாறேயின் மேடையில் ஊழலை ஒழிப்போம் என்று கோசம் போடுகிறான். கூட்டம் குதூகலிக்கிறது.மேடை நாயகன் முறுவலிக்கிறான்- தன் எதிரிகளுக்கு எதிரான மற்றொரு” ஆயுதம்” தனக்கு கிடைத்திருப்பதை எண்ணி. ஊரை ஏமாற்றும் இந்த பொறுக்கிகளை மேடையில் வைத்தே செருப்பால் அடிக்கும் துணிவு பரிசுத்த ஆத்மாக்களுக்கு இல்லை. இதுதான் நம் நாட்டின் சாபக்கேடு.நாஞ்சிலார் நன்றாகத்தான் சொல்லி இருக்கிறார் – நல்ல மேய்ப்பர்கள் என்று.

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு. எனது மனக்குமுறலும் இது தான். இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி ஐயா.

 3. துளசி கோபால் சொல்கிறார்:

  இப்படிப் புட்டுப்புட்டு எழுதி வச்சாலும்….. படிக்கிற நம்மாட்கள் புரிஞ்சாலும் புரியாதமாதிரிதான் இருப்பாங்க. அதுவும் வெளி நாட்டு வாழ் தமிழர்களைக் குறிவச்சே இந்த சினிமா வியாபாரம் அமோகமா நடக்குது. எல்லாம் காய்ஞ்சுப்போய்க் கிடக்கும் ***களுக்கு இது போதும் என்ற மனப்பாங்கு.

  நடிப்பை ஒரு தொழிலாப் பார்க்காம நடிகனை தெய்வமாப் பார்க்கும் மக்கள்ஸ் இருக்கும்வரை……. மிளகாய் அரைக்காமல் விடுவாங்களா??????

 4. ஸ்டார்ஜன் ஷேக் சொல்கிறார்:

  அருமையான பகிர்வு சுல்தான் சார். இன்றைய இளைஞன் செய்யும் சாகசமெல்லாம் சினிமா நடிகனுக்குதான். அதில் ஒரு பகுதியாவது தனக்கென்று செய்வானானால் இந்தியா வல்லரசாய் என்றைக்கோ ஆகிருக்குமே.. நிழலுக்கு கொடுக்கும் மரியாதை நிஜத்துக்கு இல்லையே.. எல்லோருடைய மனக்குமுறல்களையும் நாஞ்சில்நாடன் சார் அருமையாக வெளிக்காட்டியிருக்கிறார். அவரது தொகுப்பை இங்கே காண்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி பகிர்வுக்கு.

 5. Venky Pillai சொல்கிறார்:

  தமிழ் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடமாகட்டும்.
  இதுபோன்று மற்றொரு துறையும் உண்டு; கிரிக்கெட். இதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை.

 6. Naga Sree சொல்கிறார்:

  கனவுலகிலே வாழும் இவர்களை நாஞ்சில் ஐயாவின்
   இந்த கட்டுரை கண்டிப்பாக ஒரு சிலரையாவது 
  திருத்தட்டும். நன்றி.

 7. Jayalakshmi (@Vetrimagal) சொல்கிறார்:

  எங்கள் மனதில் பல வருடங்களாக இருக்கும் எரிச்சலை எழுத்தில் பார்த்த மாதிரி ஒரு சந்தோசம். இந்த அற்புத எழுத்தை என்னால் இத்தனை தொலைவில் இருந்து படிக்க வகை செய்த உங்களுக்கு என் வணக்கம்.

 8. thanu pillai சொல்கிறார்:

  thank your mr. sulthan to bring this article for the whole tamil world.N.C.thanu
  pillai. Nagercoil

 9. selvaa சொல்கிறார்:

  ithu nadiganin thavara ? illai makkalin thavara ? yenentral intru nammudan ulla oruvan thaane naalaya nadigan. muthalla adippadayai thiruththunga sir..,,,

ஜோதிஜி திருப்பூர் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s