வ(வி)சன கவிதை

நாஞ்சில் நாடன்
பேருந்து நிலையமெலாம்
திரை எழும்பும் கூலியினம்
.
இடுப்பில் ஒன்றெனில் கைவிரல்
மடிப்பில் மற்றொன்று
தலையில் சுமடமர்ந்த
பயணப் பொருள் மூட்டை
.
தெற்கின் சக உதிரம்
தெங்கெண்ணெய்த் தலையொழுக
ஊர் பார்த்து வழியேகும்
.
உமையாளின் மணநாளில்
தேவர் கனம் சமன் செய்ய
தெற்கே வழி மறந்த
குடமுனியும் வடக்கேகும்
.
காலை அதிரக் கனத்த வேட்டொலியில்
வாணத்து வெளிச்சத்தில்
பட்டாசும் பலகாரமும் வாங்கும்
கை நகத்தில் கிரீஸ் மணக்கும்
.
தீபாவளிக் கனவுதனில்
தலையணையில் வாயொழுக்கி
அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும்
அறியாத மதலை இனம்
.
செந்தமிழர் முன்றில் தொறும்
காரிருள் கலையுமுனம்
வண்ணச் சுண்ணத்தில்
Happy Divali
நடுவில் பூவாணம்
.
அரை நூற்றாண்டு ஆயிற்று
எரியாது அணைந்து ஒழிந்த
உதிரி வெடி பொறுக்கி
உல்லாச நடை நடந்து
.
ஈழத்தில் செத்தொழிந்த
எம்மினத்துப் பொடியர்க்கு
எத்தனையாவது திவசம் இது?
.
மீனுக்குள் கடல் கண்ட
தோழன் ‘ பாதசாரி ‘
துக்கத்தில் சொன்னதிது
காலத்தின் சுவை என்றும்
கண்ணீரின் உப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உயிர் எழுத்து
தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வ(வி)சன கவிதை

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    மீனுக்குள் கடல் கண்ட

    தோழன் ‘ பாதசாரி ‘

    துக்கத்தில் சொன்னதிது

    காலத்தின் சுவை என்றும்

    கண்ணீரின் உப்பு.

    அருமை ஐயா. நன்றி.

  2. இருள் என்பது குறைந்த ஒளி – மகாகவி பாரதி.
    நம் கண்ணோரம் ஈரம் மறையும். ஈழம் மலரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s