மொழியும் சைகையும்


உள்ளும் புறமும் கரிய வராக நிறம்
அதிகாரம் பணம் பதவி கண்ட
வாலின் சுழி இனக்குணம்
வறண்ட மலம் Staple Fiber food
 .
குறிஞ்சி கருங்குவளை நீலம்
சங்குபுட்பம் நீலாம்பல் கருநொச்சி
கருந்துளசி நீலஊமத்தை எனக்
கபிலன் குறித்த , குறிக்க மறந்துபோன
யாவும் சட்டியில் வளரும் குரோட்டன்
 .
அருங்காட்சியகங்களில் உருவம் நட்டு
இனப்பெயர் வரையப்படும்
சங்கம் காப்பியங்கள் முப்பால் கம்பன்
யாவும் சொத்தாக இருந்து அழிந்தவை
எனவும் குறிக்கப் பெறலாம்.
 .
மறம் அறம் காதல் கொடை விருந்து
அன்பென யாவும் பூர்வ குணங்கள்
எனவாகும்
 .
வாழத் தகுதியற்ற இனம் போலும்
அழிந்து போயிற்று
எனப் பார்வையாளர் இரக்கம்
உகுத்து நகர்வர்
எவனோ எங்கோ என்றோ பாடி வைத்தான்
தனெக்கென நாடு , கொடி , கீதம் இல்லா
மொழி அழியும் என
 .
இன்று நாளையைக் குறிப்புணர்த்துவது
பல்லிளித்தல் கையேந்துதல்
கூனிக் குறுகி நிற்றல்
இரத்தல் தெண்டனிடுதல் செய்வாருக்கு
மொழி எதற்கு?
 .
சைகையே வெள்ளம் அல்லவா!
.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~நாஞ்சில்நாடன்
தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s