அன்புள்ள சுல்தான் ,
இந்த கடிதம் நாஞ்சில் அவர்களுக்கு அனுப்ப உதவ வேண்டுகிறேன் (அவர் மின்னஞ்சல் முகவரி கிடைக்க வில்லை ,அவர் தளத்தில் உங்கள் முகவரி இருந்தது )
அன்புள்ள நாஞ்சில் ஐயா,
தமிழினி இதழில் கரு(று)ப்பு சார்ந்து நீங்கள் எழுதிய கட்டுரை படித்த பின்பு உங்களிடம் உரையாட விரும்பினேன் (சமூகம் மேல் உங்களிடம் உள்ள கோபம் பற்றி).
ஐயா என் நோக்கில் எழுத்தாளன் தாய் அல்லது கடவுளுக்கு சமானமானவன்,உலகம் அவன் குழந்தை,அதன் மீது அன்பு கலந்த கோபம் இருக்கலாம் வெறுப்பு இருக்காது நீங்கள் வெறுப்புக்கு போய் விடுவீர்களோ என்று அஞ்சுகிறேன் ,நான் பெரும்பாலும் வயதானவர்களை கவனிக்கிறேன் ஞானி அல்லது ம.நன்னன் போல வெறுப்பினை மட்டுமே (அதன் நோக்கம் பற்றி சொல்ல வில்லை ) உமிழ்பவர்கள் ஒரு வகை ,
குழந்தையை போல மாறிடும் இன்னொரு வகை,
ஆச்சர்யம் இரு வகையினரையும் சேர்த்து உங்களில் நான் பார்க்கிறேன்
உதாரணம் அந்த மாம்பலம் திருடும் சிறுவனின் கதை அவ்வளவு அழகா ருசி பார்க்கும் சிறுவன் கடைசியில் படும் கோபம் என்னால் நம்பவே முடிய வில்லைஅது கோப கனவு மட்டும்தான் உண்மையில் முடியாது னு நினைத்தேன் .இதை எழுத காரணம்,ஒரு பழையசோறு பசித்த காலையில் சந்தோசமான கொண்டாட மனநிலையை உருவாக்கிவிடும்அவ்வளவு பெரிய அற்புதம் உணவு அதை சொல்லும் எழுத்தாளன் நீங்கள்என்பதுதான். அப்புறம் காகத்தை பார்த்து வெறுப்பதற்கு காரணம் நிறம் மட்டுமில்லை இறந்தவிலங்கின் சடலத்தை உண்பதும் அதன் முகத்தில் பித்ருவை காணும் நம் கலாசாரத்தின் மனநிலை போன்றவையும்தான் என நினைக்கிறன்.
காப்பியங்கள் பற்றிய கட்டுரை எனக்கு பிடித்ததுங்க நீங்க அப்படி மணிமேகலை ,சீவசிந்தாமணினு ஒவ்வொரு நூலினை பற்றியும் தனிநூல் (அதன் மேன்மை பற்றி சொல்லும்)எழுத வேண்டுகிறேன்
ஏனெனில் நான் பள்ளியில் வாசிக்கும் காலத்தில் இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால் நான் எங்கோ சென்றிருப்பேன்.
நன்றிங்க .
அன்புடன்
ராதா கிருஷ்ணன்
radhakrishnan.kraju@gmail.com