சின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், பலகணிகள் மூலமாகச் சுற்றியிருந்த உலகைப் பார்த்தேன். இன்றும் குப்பைத் தொட்டியில் எச்சில் வழிக்கும் எவரைக் கண்டாலும் தொண்டை அடைக்கிறது.
பந்தியில் இருந்து எழுப்பிவிட்ட எவரும் மேல் சாதிக்காரர்கள் அல்ல. அயலூர்க்காரர்கள் அல்ல. செல்வச் செழிப்புள்ள பண்ணையார்களும் அல்ல. இன்றும் அவர்களைக் காணும்போது எரிச்சல் பிறக்கிறது. இரக்கமும் தோன்றுகிறது. ஆனால் எனக்குள் எழும் கேள்விகள் படைப்புத்தடம் பிடிக்கின்றன.…..நாஞ்சில் நாடன்.
பிற நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள்
அருமையான கதை.
மனதை பெரிதும் வேதனைப் படுத்துகிறது.
நன்றி ஐயா.
அருமையான கதை.