எங்க நாஞ்சில் வீட்டுக் கல்யாணம்

ச விஜயலச்சுமி
முன் பகுதிகள்: எங்கவீட்டுகல்யாணம்…பகுதி-1   எங்க வீட்டுக் கல்யாணம்…பகுதி-2
பார்த்த இடத்தின் களிப்போடும் தங்கையின் திருமணத்தின் குதூகலத்தோடும் மண்டபத்திற்குவந்தேன்.தமிழ்ச்செல்வன் அண்ணன் மகனின் திருமணத்திற்குபின் இத்தனை படைப்பாளிகள் கலந்துகொண்ட திருமணம் சமீபத்தில் வேறெதுவும் இல்லை.எனக்கு நேரடி அறிமுகமில்லாத பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக இருந்தது.தங்கை சங்கீதா பொறுப்பு மிக்கவள்.
அவளது பொறுப்புணர்ச்சியினால் எனக்கு கொஞ்சம் செறுக்குகூட, பல முறை என் மகள்களிடம் சங்கீதாவைப்பற்றிக் கூறியிருக்கிறேன்.வரிசையாக பல படைப்பாளிகளைப்பார்த்ததால் யாரிடம் பேசுவது எனப்புரியவில்லை.எதிர்பட்டவர்களிடமெல்லாம் பேசினேன்.எதிரெதிராய் பார்த்துக்கொள்ள வியலாதவர்களைப் பார்க்கத்தவறியிருந்தேன்.
ஆண்களுக்கு மதுவை எடுத்தால்தான் கொண்டாட்டமென பார்க்கிறோம்.பெண்களோ சந்திப்பையே கொண்டாட்டமாய் மாற்றக்கற்றவர்கள்.நான்கு பெண்கள் இருந்தால் சண்டை போட்டுக்கொள்ளுவார்கள் என புருடா விட்டு பழகியிருக்கிறார்கள் .கருத்துவேறுபாடு இருக்குமிடத்தில் பால் வேறுபாடு,வயதுவித்தியாசமில்லாமல் முட்டிக்கொள்வது கண்கூடு.
பரமேஸ்வரியும் நானும் காலைமுதல் ஒன்றாகவே பயணப்பட்டோம்.அவளுடைய திருவட்டாறு பயணத்திட்டத்தையும் எனது சிதறால் திட்டத்தையும் இணைத்து ஒன்றாக பயணித்திருந்தோம்.(யுவபாரதி, லஷ்மி,பழனியுடன் ஐவராக பயணித்தோம்).எங்களோடு மண்டபத்தில் மதுமிதாவையும் சக்திஜோதியையும் சந்தித்ததும் நிகழ்வு கொண்டாட்டமானது. நாஞ்சிலோடு குழுபடம் எடுத்துக்கொண்டோம்.நெல்லைகண்ணன் யாரிவங்க நாஞ்சில் எனக்கு அறிமுகப்படுதவில்லையே என விசாரித்துக் கொண்டிருந்தார். வந்திருந்த படைப்பாளிகளில் சிலரை இங்கே குறிப்பிடுகிறேன்.
1.அ.க.பெருமாள்
2.வேதசகாயகுமார்
3.ச.தமிழ்ச்செல்வன்
4.சு.வெங்கடேசன்
5.ஜாகிர்ராஜா 
6.மரபின் மைந்தன் முத்தையா
7.பாரதிமணி
8.ஞானராஜசேகரன்
9.நெல்லைகண்ணன்
10.தங்கர்பச்சான் 
11.அ.மார்க்ஸ் 
12.க்ருஷி
13.நாறும்பூநாதன் 
14.குமாரசெல்வா
15.என்.டி.ராஜ்குமார்
16.சு.வேணுகோபால்
17.கண்மணிகுணசேகரன்
18.கோபால்(vanamalai)
19.கே.எம்.விஜயன்
20.அழகம்பெருமாள்
21.நெய்தல்கிருஷ்ணன்
22.ஆ.மாதவன்
23.சௌந்தர்
24.வள்ளத்தரசு
25.டாக்டர்.எல்.மகாதேவன் 
26.குமரித்துரைவன்
27.கா.மோகனரங்கன்
28.தேவதேவன்
29.பாதசாரி
30.லஷ்மிசரவணகுமார்
31.மதுமிதா
32.பரமேஸ்வரி 
33.சக்திஜோதி
34.சுபாஷினி
மற்றும் பலர் விடுபட்டிருக்கலாம் 
இத்தனைபேரையும் ஒரேயிடத்தில் பார்க்கமுடிந்தது இனிய அனுபவம்.சுல்தான் மனைவியோடும் தம்பி மற்றும் அவரதுமனைவியோடு குடும்பசகிதமாக வந்திருந்தார்.
திருமணம் சிறப்பாக நடைபெற்றது.பெண்ணுக்கு அப்பா பேண்ட் சட்டையோடு அவ்வப்போது மேடையை விட்டிறங்கிவர அவரை மீண்டும் மேடைக்கு அழைக்க 
நாஞ்சிலின் மனம் வந்திருந்தவர்களோடும் வாத்தியக்கருவிகளோடும்(தவில்)கலந்திருந்தது.அன்று மாலை முட்டம் சென்றோம்.காமிராவிற்குள் அலைகளைத்துள்ளியமாக கொண்டுவரப்போராடினோம்.மிக அழகான இளஞ்சிவப்பு மணல் போர்த்தி பாறைகளோடு ரம்யமாயிருந்தது.
அலைபோர்த்திய மணல் விலகவியலாமல் பிடித்திழுத்தது.அடுத்தடுத்த நாட்களில் நாஞ்சிலிடமிருந்து வந்த செய்திகள் பிரிவு காரணமாக தாய்மை மனம் அடையும் சோர்வை வெளிப்படுத்தியது.தங்கையின் அகப்பூரிப்புக்குள் தன்னைக் கரைத்துக்கொண்டிருக்கிறார்.அலைகள் ஓயாமல் அலைந்துகொண்டிருக்கிறது சிறிதும் பெரிதுமான அலைகளுக்குள் நாம்தானே கால்நனைக்கிறோம்…….

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கல்யாண கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to எங்க நாஞ்சில் வீட்டுக் கல்யாணம்

 1. rathnavel சொல்கிறார்:

  அருமை.
  எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

 2. MURALIDHARAN சொல்கிறார்:

  My best wishes to the newly wedded couple

 3. ”ஆண்களுக்கு மதுவை எடுத்தால்தான் கொண்டாட்டமென பார்க்கிறோம்.பெண்களோ சந்திப்பையே கொண்டாட்டமாய் மாற்றக்கற்றவர்கள்” இவ்வளவு ஆளுமைகளை பட்டியலை வாசிக்கும் போதே எங்களுக்கு கொண்டாட்டமாய் இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s