வருகையும் விருந்தும்- நாஞ்சில்நாடன் வீட்டு கல்யாணம்

நானறிந்து இந்த அளவுக்கு எழுத்தாளர்கள் பங்கெடுத்த திருமணம் சமீபத்தில் இல்லை. நெடுநாட்களுக்குப்பின் பல நண்பர்களைப்பார்த்தேன். 12 ஆம்தேதி காலையிலேயே என் வீட்டுக்கு யுவன் சந்திரசேகர் வந்துவிட்டான். விஜயராகவன் ஈரோட்டில் இருந்து வந்தார். சென்னையில் இருந்து சிறில் அலெக்ஸ் வந்திருந்தார். சு.வேணுகோபாலுக்கு அந்த அளவுக்கு நரை வந்திருப்பது வருத்தமாக இருந்தது. சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்] யைக் கொஞ்சம் இடைவேளைக்குப்பின் கொஞ்சம் குண்டாகப் பார்க்க முடிந்தது. சுதீர் செந்தில் [உயிரெழுத்து] வந்திருந்தார். வசந்தகுமார், க.மோகனரங்கன் வழக்கம்போல வந்து அமைதியாக இருந்தார்கள். பாரதிமணி வந்திருந்தார். அ.மார்க்ஸைப் பார்த்தேன், தூரத்தில். கெ.எம்.விஜயனுடன் கொஞ்சநேரம் பேசினேன். தங்கர் பச்சான், ஞான ராஜசேகரன், அழகம்பெருமாள் என திரைத்துறையாளர்கள். பெங்களூரில் இருந்து ஜடாயு வந்திருந்தார்மணல்வீடு ஹரிகிருஷ்ணனை சந்தித்தேன்.. பாவண்ணன், மகாலிங்கம் வந்திருந்தார்கள். ஆ.மாதவன் வந்திருந்தார். வண்ணதாசனைப் பார்த்தது மிக நிறைவூட்டும் அனுபவமாக இருந்தது. எஸ்.ஐ. சுல்தான் மனைவியுடனும் அவரது தம்பி அமீர் ஹம்ஷாவுடனும் வந்திருந்தார்…..(ஜெயமோகன்)
வேதமற்றும் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி, அ.கா பெருமாள், வேத சகாய குமார், எம் எஸ் அண்ணாச்சி, தெரிசனங்கோப்பு வைத்தியர் மகாதேவன், நா. ஜெயபாஸ்கரன், பாவலர் இரணியன்,பல்லடம் முத்துகுமாரன் அய்யா, சவுந்தர் அண்ணா, பொன்நீலன் , குமார செல்வா,காலச்சுவடு கண்ணன், கிருஷ்ணன் நம்பி தம்பி வெங்கடாசலம், பாதசாரி,நா வேணுகோபால், காவல் கோட்டம் சு வெங்கடேசன், கீரனூர் ஜாகீர்ராஜா,கண்மணி குணசேகரன்,கவிஞர்கள் தேவதேவன், மதுமிதா, சக்திஜோதி, சா விஜயலட்சுமி முதலியோரும் வந்திருந்தார்கள்
(நாஞ்சில்நாடன் வீட்டுத் திருமணம் என்பதனாலேயே சாப்பாடு பற்றி மிகையான எதிர்பார்ப்பு சூழலில் நிலவியது. ஆனால் சாப்பாடு அந்த எதிர்பார்ப்பைவிட நன்றாக இருந்தது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக நெடுநாள் கழித்து, சீசன் அல்லாத சமயத்தில், கிடைத்த சக்கைப்பிரதமன். [பலாப்பழபாயசம்]. அன்னாசிபழ புளிசேரி போன்றவை. மிக விரிவான விருந்து. ….ஜெயமோகன்)
நாஞ்சில் நாடன் வீட்டு கல்யாண விருந்து மெனு
1, உப்பு
2 துவட்டல்
3 மாங்காய் கொத்சு
4 இஞ்சி பச்சடி
5 நார்த்த்ங்காய் பச்சடி
6 மிள்காய் பச்சடி
7 தயிர் கிச்சடி
8 அன்னாசிபழ ஜாம்
9 அவியல்
10 எரிசேரி
11 சேனை சாப்ஸ்
12 பொரித்த கூட்டு
13 பருப்பு வடை
14 பப்படம்
15 ரசகதலி பழம்
16 கற்கண்டு சாதம்
17 சாதம்
18 பருப்பு
19 நெய்
20 சாம்பார்
21 அன்னாசிபழ புளிசேரி
22 ரசம்
23 சம்பாரம்
25 சிறுபயறு பிரதமன்
26 சக்கை பிரதமன்
27 பால் பிரதமன்
28 போளி

……………………………..

எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வருகையும் விருந்தும்- நாஞ்சில்நாடன் வீட்டு கல்யாணம்

 1. Velmurugan.k சொல்கிறார்:

  Manathil magelvu
  samaiyal list parthu naagil….

 2. rathnavel சொல்கிறார்:

  அருமை.
  மகிழ்ச்சி.

 3. manimuthu.s சொல்கிறார்:

  சிறப்பு

  மகிழ்ச்சி

  வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s