நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள்

 …நாஞ்சில் நாடன் எழுதிய கல்யாணக் கதைகள்

1.
பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அக்காளுக்கோ வேறு உடன்பிறப்பு கிடையாது. நிச்சய தாம்பூலதுக்கே எழுத்து உண்டு. ‘தத்தர’ நடவு சமயம் எனவே போகமுடியவில்லை. இப்போது கல்யாணத்துக்கு எங்கு கடன்பட்டாலும் எவள்  தாலியை அருத்தானாலும் போய்த்தான் தீர வேண்டும். செய்யும் கட்டு செய்யாமல் விட்டால் குறைச்சல் இல்லையா?      கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்
2.
வடக்குத் தெரு, மூலைவீட்டு வன்னியப்பெருமாள் வீட்டில் அன்று திருமணம். மூத்த மகளுக்கு. மாப்பிள்ளை செண்பகராமன்புதூர். திருமணம் முடிந்து பந்தி நடந்துகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமையாதலின் அவ்வூர் இளம் பிராயப் பிள்ளைகள் அனைவரும் நின்று விளம்பிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பகல் பன்னிரண்டு மணி சாய்ந்தது. காலை எட்டரை மணி முகூர்த்தம். முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டாயிற்று. இடலாக்குடி ராசா – நாஞ்சில் நாடன்
3.
நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள் அதற்கு முன்பும் நடந்திருக்கும். பின்பும் நடக்குமாக இருக்கும்.
கிழக்குப் பார்த்து விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.
 கிழக்கென்பது அனுமானம் தீர்மானித்தது. காங்கிரீட் அடுக்குப் பெட்டிகளுக்குக் கிழக்கும் மேற்கும் என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் போல. ஆனால் வாஸ்து புரோகிதர்கள் உழக்கிற்குள்ளும் ஈசானமூலை, கன்னிமூலை, அக்னிமூலை என வாய்ப்பாடு சொல்வார்கள்    தாலிச்சரண்
44
அக்கரை என்றோர் ஊரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.பொதுவாக ஆற்றின் மறுகரை என்பது பெறுபொருள்.ஆற்றின் இக்கரையில் பிரதானமான ஊராக சுசீந்திரம் இருப்பதால், இரண்டாகப் பிளவுபட்டு கிடக்கும் மறுகரையில் இருக்கும் ஊரது.  நானிங்கு சொல்ல வருவது அந்த அக்கரையைதான்.  இந்த கர்நாடக இசை உலகில் கசிந்து குழைந்து உருகிவரும் வயலின் இசையொன்று அந்த ஊர்ச் சிறுமிக்குச் சொந்தமானது என்பதும் அறிக ஐயம் இட்டு உண்
5.  
சின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், பலகணிகள்இருள்கள் நிழல்களல்ல –
6  
 பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், பலகணிகள் மூலமாகச் சுற்றியிருந்த உலகைப் பார்த்தேன். இன்றும் குப்பைத் தொட்டியில் எச்சில் வழிக்கும் எவரைக் கண்டாலும் தொண்டை அடைக்கிறது.பந்தியில் இருந்து எழுப்பிவிட்ட எவரும் மேல் சாதிக்காரர்கள் அல்ல. அயலூர்க்காரர்கள் அல்ல. செல்வச் செழிப்புள்ள பண்ணையார்களும் அல்ல. இன்றும் அவர்களைக் காணும்போது எரிச்சல் பிறக்கிறது. இரக்கமும் தோன்றுகிறது. ஆனால் எனக்குள் எழும் கேள்விகள் படைப்புத்தடம் பிடிக்கின்றன.….. துறவு
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

தொகுப்பு
Gallery | This entry was posted in அனைத்தும், இலக்கியம், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள் க்கு ஒரு பதில்

  1. rathnavel சொல்கிறார்:

    அருமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s