சிறுதெய்வம்

நினைப்பதை விரும்புவதைப்
பேசயிலாத,
மந்திரத்தில் கட்டுண்ட
சிறு தெய்வம் யாம்
பெயர் சுடலை மாடன் , கழுமாடன் , புலைமாடன்
யாதெனில் என்?
உறுமல் , குமுறல் , சைகை
நயனத்து அசைவு  ,நடமிடும் காற்சுவடு
எம் மொழி
கூக்குரல் எம் சிலிர்ப்பு
ஊளை எம் கானம்
உன் குலக் காவல் எம் தொழில்
நீ
பலிசேய்வாய்-
கொம்பு முறுகி விதை திரண்ட
ஆட்டுக்கடா ,
கடைவாயிற் பல்முளைத்த
கொம்பன் பன்றி ,
கருஞ்சிகப்புச் சேவல் , கன்னி கோழி முட்டை ,
வம்பன் தடியங்காய்
 படைப்பாய்-
பச்சரிசிச் சோறு , வாற்றுச் சாராயம் ,
எள்ளுப்பிண்ணாக்கு கருப்பட்டி ,
சுட்ட கருவாடு , சுருட்டு ,
வருக்கைப்பலா , மட்டிக் குலை ,
பிளந்து வைத்த வெள்ளரிக்காய் ,
சோடிப்பாய்
கமுகம் பூ , தாழம் பூ , பிச்சிப் பூ
அதரளிப் பூ , பூந்துளசி
அணிவிப்பாய்-
எருக்கலம் பூ மணி கோர்த்த சல்லடம்
இடுப்புக் கச்சை , பாயச்சல் கயிறு ,
தலைக்குல்லாய்
ஆயுதமாய்க்
குந்தம் , ஈட்டி , தண்டம் , வெட்டரிவாள்
அதிரக் கொட்டுவாய்-
தவில் , முரசு , பம்பை , உடுக்கு , கைதாளம்
உறுமி , மகுடம் , தப்பட்டை
யாதொன்றும் வேண்டாம் எமக்கு
நெய்யாற்றின் கரை வாழும்
மாந்தரீகனைக் கூப்பிட்டு
எம் வாய்க்கட்டு அவிழ்த்து விடு
வெண்டை வெண்டையாய் நாலு வாக்கு
கேட்க வேண்டும் உன்னை!
 த்தூ…………!
நீ ஒரு மனிதன் தானா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~நாஞ்சில்நாடன்
உயிர் எழுத்து, அக்டோபர் 2011
தட்டச்சு: பாலா, சிங்கப்பூர்
எஸ் ஐ சுல்தான் 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சிறுதெய்வம்

 1. Anand சொல்கிறார்:

  arrumai. Jeyamohanin maadan motcham gybham varugirathu..

  – Anand.

 2. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  அருமையான கவிதை.
  Facebook ல் எனது எருக்கலம்பூ புகைப்படத்திற்கு
  உங்கள் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளேன்

  “அணிவிப்பாய்-
  எருக்கலம் பூ மணி கோர்த்த சல்லடம்
  இடுப்புக் கச்சை , பாயச்சல் கயிறு ,
  தலைக்குல்லாய்
  ஆயுதமாய்க்
  குந்தம் , ஈட்டி , தண்டம் , வெட்டரிவாள்..”
  நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s