புதிய புத்தகம் பேசுது- கீரனூர் ஜாகீர்ராஜா – நாஞ்சில் நாடன் நேர்காணல்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வணக்கம்.நேர்காணல் வாசித்தேன்.உண்மைக்கு மிக அருகில் என்பார்கள்.அதையும் தாண்டிய வார்த்தைகள் உங்களுடையவை.மிக நேர்மையான இயல்பான பதிவு.ஒரு விவசாயி ராப்பகலா தன் நிலத்தோடு ரத்தமும் சகதியுமாய் பின்னிப் பிணைந்து கிடப்பது போலானதுதான் உங்கள் நாஞ்சில் மண் சார்ந்த எழுத்தும்.நாளைய உங்கள் சமூகத்துக்கு இது மட்டுமே உயிர்ப்புள்ள வரலாறாக இருக்க முடியும்.இன்னும் இன்னும் எழுதுங்கள்.எனது 21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்,மற்றும் லாவணி-ஆகிய ஆவணப் படங்களை தங்கள் பார்வைக்கு அனுப்ப விரும்புகிறேன்.என் மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரி எழுத வேண்டுகிறேன். நன்றி.— —– —— நேசமிகு…….எஸ்.ராஜகுமாரன். 9840124602.