நன்றி: சொல்புதிது (எழுத்தாளர் ஜெயமோகன்) (www.Jeyamohan.in)
From: Bala Venkat <vbal…@gmail.com>
Date: Sat, 24 Sep 2011 22:56:17 -0500
Subject: மொஹித்தே
நாஞ்சில்நாடன் தளத்தில் “மொஹித்தே” என்ற பதிவு 21/9 அன்று பதிவாகியுள்ளது.
இது எந்த வகை எழுத்து – சிறுகதையா? தொடர்கதையின் ஒரு பகுதியா? – என்று
புரியவில்லை. முடிவு விட்டுப்போனதுபோல் தோன்றியது. நன்பர்கள் விளக்குவீர்களா?
நன்றி.
பாலா.
Date: Sun, 25 Sep 2011 11:03:36 +0530Local: Sun, Sep 25 2011 10:33 am
jeyamohan_ B Subject: Re: (ஜெயமோகன்.இன் Group) மொஹித்தே
இதில் என்ன குழப்பம்?
‘எனக்கு சொந்தக்காரன் இல்லையா நீ?’
என்ற வரிதான் இதை சிறுகதையாக்குகிறது. மொழி, இனம், தொழில் , வட்டாரம்
எல்லாவற்றையும் தாண்டி மனிதன் மனித்னுக்குச் சொந்தக்காரனாகும் ஒரு தருணம்.
தளவாய் தன்னை தமிழனாக, வெளியே இருந்து வந்தவனாக எண்ணிக்கொண்டிருக்கிறான்.
மொகித்தேவை பொறுத்தவரை அவன் உறவுதான்
Essex Siva From: Essex Siva <essexs…@gmail.com>
Date: Sun, 25 Sep 2011 12:01:02 +0100
Subject: Re: (ஜெயமோகன்.இன் Group) மொஹித்தே
நாஞ்சிலாரின் நிறைய படைப்புகள் பம்பாயைச்சுற்றி வருவதால் அவரது படைப்புகளை
சமீபமாக அவரது தளத்தின் மட்டுமே தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு (நானும்) முதலில்
இந்த குழப்பம் வரலாம் (மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்கதைகளின் அத்தியாயங்கள்
தினமும் மாறி மாறி வெளியாவதும் காரணம்).
ஆனால் கதை சில பாராக்களில் தெளிந்து கடைசியில்தான் தளவாயையும் நம்மையும் சின்ன
கூச்சத்தையும் கோபத்தையும்(நம் மீதுதான்) ஏற்படுத்திவிடுகிறதே!
Arangasamy K.V From: “Arangasamy K.V” <arangas…@gmail.com>
Date: Sun, 25 Sep 2011 16:44:30 +0530
Subject: Re: (ஜெயமோகன்.இன் Group) மொஹித்தே
இணையத்தில் நிறையபேர் வாசிக்கிறார்கள் என்ற தகவலேமகிழ்ச்சியளிப்பது .
Essex Siva From: Essex Siva <essexs…@gmail.com>
ஆமாம், பின்னூட்டங்கள் இடுவதில்லையே தவிர நிறைய பேர் படிக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
நானும் குற்ற உணர்வுகளுடன் படிக்கிறேன். ஒன்று, மனுஷன் மாங்கு மாங்கு என்று இவ்வளவு எழுதியிருக்கிறார், இவ்வளவு நாள் எப்படி கவனிக்கவில்லையென. இன்னொன்று ஓசியில் படிப்பது குறித்து!
Raj Chandra : சிவா…என்னதான் இணையத்தில் படித்தாலும் முழு புத்தகமாகப்
படிக்கும்போதுதான் continuity-ம், திருப்தியும் வருகிறது. இதை ஜெமோ,
எஸ்ரா புத்தகங்களில் உணர்ந்திருக்கிறேன்.
Essex Siva From: Essex Siva <essexs…@gmail.com>
ராஜ்,
சந்தேகமே இல்லாமல் முழு. காகித புத்தக வடிவுதான் சிறந்தது. அது புதுசாயிருந்தாலும் சரி, பழைய பைண்ட் புத்தகங்களானாலும் சரி( இது இன்னும் சுவாரசியமானது, நம்மை புத்தகம் வந்த காலத்திற்கே கொண்டு போய்விடும்…இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்)
ஆனால் என்னை மாதிரி ஊரு விட்டு ஊரு மாறுபவர்களுக்கு எல்லா இடங்களுக்கும் புத்தகங்களை கொண்டு போக முடியாதே/கிடைக்காதே! இணையம்தான் அட்சயப்பாத்திரம்!
இந்த பிரச்சனைகளெல்லாம் இல்லாதவர்கள் பாக்கியவான்கள்! (ஆனால் இது அவர்களுக்கு தெரியாத அபாக்கியவான்கள் கூட!)
இக்கரைக்கு அக்கரைப்பச்சை!
………………………………………….. ……………………