ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது
அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம்
தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை
நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்?
மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க
இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் அடையாளம் என்னவாக
இருக்கும்?
கதையை படித்து முடித்ததும் உங்களை அதுவே ஆக்கிரமித்திருக்கும்……….(கதிர்)
நாஞ்சில் நாடன்
மரண்த்தின் பிடியில் தாய் இருக்கையில் ம்கனின் செயல் பாடுகளுரவினரின் உதாசீனங்கள் என்று வாழ்க்கை ஓய்வுபெற் ச்சில ஆண்டுகளேஇருக்கையில் மீண்டும் செல்லவேண்டிய ஆசை என வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை அற்புதமாய்ச்ச் செதுக்கி இருக்கிறார் தொடர் கதை என்று தெரியாமலே படிக்கத்துவங்
கி முடிக்கையில் தொடரும் போட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது கதை அருமை