நாஞ்சில் நாடன்
முன்கதை:மிதவை தொடர்
…………..மிதவை நாவல் முடிந்தது.
இனி சண்முகம் நாராயணனாக திரும்பிவந்து வாசகர்களுடன் ”சதுரங்க குதிரை”யில் தொடருவார்.
நாஞ்சில் நாடனின் ‘ சதுரங்க குதிரை ‘ (நாவல்)
http://mtvenkateshwar.blogspot.com/2010/12/blog-post_23.html
இதற்கு முன் நாஞ்சில் நாடன் அவர்களை
‘சொல்ல மறந்த கதை’ திரைப்படம் வழி தெரியும், ‘சதுரங்க குதிரை’ நாவலை கேள்வி படவில்லையென்றாலும் , இலக்கிய பரிச்சயம் பெற்ற நபர் மூலம் படிக்க கிடைத்தது. (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடை விடுமுறை யில் படித்தது. அன்று எடுத்த குறிப்புகள் வழி விளக்க முயல்கிறேன். ) இதில் விஷேசம் என்னவென்றால் , 1993 ல் வெளிவந்தது , அந்தான்டுக்கான சிறந்த நாவலுக்கான தமிழ் பரிசு, புதிய பார்வை நீலமலைத் தமிழ்ச் சங்கப் பரிசு, மற்றும் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் டிரஸ்ட் பரிசு பெற்றது.
குறிப்பாக ஒரினச்சேர்க்கை பற்றி ஒரு சம்பவம் இந்த நாவல் பேசுகிறது.
நாராயணன் ஒரு பிரம்மசாரி அப்படியான தான் பிரம்மசாரியத்திற்கு கேடு விளைவிக்க வரும் தடைகற்களே புத்தகம் நெடுக பரவி கிடக்கிறது.
அவன் கிராமத்து சூழ்நிலையில் வளர்ந்து பணி நிமித்தமாக
பம்பாயில் இருப்பவன். அவனுக்கும், தாய்க்கும் நடக்கும் கடித போக்குவரத்து , இழவுக்கு கூட போக முடியாத இக்கட்டான நிலைமை ,அறை கதவு இடுக்கில் பார்க்க வைக்கும் குறுகிய எண்ணங்கள், அவனுக்காக துணை இருக்கும் பிரம்மசாரி நண்பனின் இறுதி மாறுதல் என கதை நகரும் , மற்றும் பிரம்மசாரியான அவனுக்கு ஏற்படும் எதிர்மறை சம்பவங்களால் விரிய , இறுதியில் அவன் தனிக்கட்டையான நிலை தொடர திருமண பந்தம் அவன் முன்னே தோற்று போகிறது. ஏற்கனவே, திருமண உறவின் மூலம் ஒரு ஆண் , பெண் வீட்டில் வாழ சந்திக்கும் (வீட்டோட மாப்பிள்ளை) பிரச்சினையை ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் மூலம் சொன்னவர்தான், அதே பாணியை போல் இந்நாவல் திருமணமாகாத பெண் சந்திக்கும் அதே பிரச்சினை ஆணுக்கும் என கதையின் ஓட்டம், ஆண் மட்டும் என விதி விலக்கா?. குதிரை எப்போதும் ஒரு காம குறியீடு , ஆனால் இதில் மட்டும் பிரம்மசாரியத்திற்கு துணை போகிறது. இது ஆசிரியருக்கே நேர்ந்த அனுபவமாக இருக்கலாம் , அவர் போன பயணங்களை போலதான் நாஞ்சில் நாடன் வாழ்ந்த நாகர்கோவில் இதில் வருகிறது . அதே அவர் பணியாற்றிய பம்பாயும் , எத்தனையோ திருமண வாழ்க்கை முறிவுகளை சொன்ன நாவல் வரலாற்றில் இயல்பான ஒரு வாழ்க்கையை சொன்ன ‘ சதுரங்க குதிரை ‘ தலைகீழானது.