வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன்.

நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.
அவுஸ்ரேலிய மண்ணில் இருந்து எமது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்திய அக்கடமி விருது கிடைத்ததற்காகவும் முதலில் ரசிகராகவும் இந்த வேளையிலே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக எழுத்துலகில் இருப்பவர். முதல் முறையாக ஒரு பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. சூடிய பூ சூடற்க என்கின்ற சிறுகதைத் தொகுதிக்காக உங்களுக்கு இந்த விருது கிடைக்கப் பெற்றுள்ளது. அது வந்து சர்ச்சைக்கு உரியது என்பதை விட சவாலான ஓர் கதை. சமகால அரசியல் விமர்சனமாக இந்தக் கதை பின்னப்பட்டிருக்கின்றது. இப்படியான கதைக்கு ஓரு அரசினுடைய அங்கீகாரம் கிடைத்ததை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
நான் வந்து நேர்மையற்ற விமர்சனங்கள் செய்றதில்லைங்க. அரசாங்கமானாலும் சரி நிறுவனங்களானாலும் சரி. ஓரு படைப்பிலக்கியவாதியின் மனோநிலையில் இருந்து சமூக நோக்கத்தோட நமக்கு சரி என்றுபடுவதை நான் விமர்சனம் செய்கிறேன். அந்த விமர்சனத்தை அவங்க எற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது நம்முடைய சிக்கல் இல்லை. ஆனா அப்படி ஒர் விமர்சனம் இருக்கிறதென்பதும் அவர்கள் அறியாதவர்கள் இல்லை. ஆகவே அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இந்த மாதிரியான விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது
பொதுவாகவே தமிழ் சமூகத்து எழுத்தாளர்களுக்கு இப்படியான அங்கீகாரங்கள் பொதுவாக இப்படி சாகித்திய அக்கடமியாகட்டும் அல்லது ஞான பீட விருதுகளாகட்டும் ஒர் புறக்கணிப்பு இருப்பதாகப்படுகின்றது,அதைப் பற்றி?
 
தொடர்ச்சியை படிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும் இங்கே செல்க:
வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் – நாஞ்சில் நாட…
 
 

About S i Sulthan

தொகுப்பு
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s