உவமைக்கு என்ன பஞ்சம்?

நாஞ்சில் நாடன்
 
காசற்ற பூசலார் கருத்தினில் சமைந்து
விரிசடைக் கடவுட்கோர் பொற்றளி
மொகலாய மன்னனின் கண்ணீரில் உயர்ந்தது
யமுனைக் கரைதனில் அமரக்கோயில்
தலையலங்காரம் புறப்பட்டதே என்ற
கம்பனின் அருமை மைந்தன்
தலை கொய்து வெட்டினார்
துன்பியற் காதற்கேணி
 
செங்கோட்டு யாழினில் மீட்டியும்
வேய்குழல் ஊதியும்
ஓவியத்து எழுதவொண்ணா
உருவத்தை தீட்டியும்
திக்கெட்டும் அலைந்தார் உண்டு
காதற் கானம் கனத்து
பாட்டறி பாணனும்
யாப்பறி புலவனும்
கசப்பினைக் கவிழ்த்துப் போனார்
 
செதுக்கத் திறனில்லை தீட்டவியலாது
யாப்புத் தெரியாது மீட்டவும்
கற்றானில்லை
 
புலறியின் பரவசம்
பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து போதி சீதம்
அலரியின் இடும்பை
செந்தழலின் சாற்றைப் பழிந்த காந்தாரிச் சாந்தம்
 
ஊமையின் கனவு
முடவன் பேராசை
அந்தகன் கண்ட களிறு
 
உவமைக்கு என்ன பஞ்சம்?
 
தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்
 
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

தொகுப்பு
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உவமைக்கு என்ன பஞ்சம்?

 1. வலைஞன் சொல்கிறார்:

  வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்…

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

 2. N.Rathna Vel சொல்கிறார்:

  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s