உய்தல்பெறு உடன் பிறப்பே!

நாஞ்சில் நாடன்
 
பந்தியில் பந்தியில்
சக உதர, சக உதிரத்
தலை கைகால் குடல் எனச்
சிந்தச் சிந்தக்
கொய்தும் கொன்றும் குவித்தனர்
 
தந்தை மகளையும்
தனயன் தாயையும்
துவக்குக் காட்டிப்
புணரப் பணித்தனர்
 
அம்மானைப் பருவத்துச்
சிறுமியர் யோனியில்
கூர்கத்தி செருகினர்
மற்றும் போந்திரா
முலையறுத்து வீசினர்
 
கொதித்திலது நம்குருதி
துடித்திலது நமது தசை
வெடித்திலது நமது உளம்
 
தன்நூன் பெருக்கற்கு
நம் ஊண் பறித்துண்ட
மன்னர் குலம் தளைப்பட்டால்
செல்வாக்குக் கூர்ந்தர்
நோயில் வதைப்பட்டால்
 
நமக்கு
 
கூட்டுப் பிரார்த்தனை உபவாசம்
மண்சோறு முண்டிதர்
அலகு குத்தல் பால்காவடி..
 
பாவம் பெரிதல்லோ!
போதுமா வேண்டுதல்கள்?
போதாது, போதவே போதாது!
 
தெய்வம் இரங்க வேறென்ன வழி?
 
குறியறுத்து உதிரம் முழுக்காட்டு
தீக்குழித்துக் கருகு
பாண்டியன் ஆபத்து தவி போல்
மண்டியிட்டமர்ந்து அடிவயிற்றில்
கொலைவாள் பாய்ச்சு
வலக்கை வாளால் தன் தலை அறுத்து
இடக்கையில் ஏந்திப்
படையலிடு பாவைக்கு தம்மை எரித்த
சாம்பர் குவித்து
கோயில் விமானத்தைக்
குடமுழுக்குச் செய்
 
தன்மான இனமான,
செம்மொழித் தமிழனாய்
உய்தல் பெறு
உடன்பிறப்பே!
*
உயிர் எழுத்து
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உய்தல்பெறு உடன் பிறப்பே!

 1. N.Rathna Vel சொல்கிறார்:

  நெஞ்சு கொதிக்கிறது.

 2. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  நாகப் பிடுங்கலின் நஞ்சாய் தகிக்கும்
  நெஞ்சக்கூடு பிளந்து நீளமாய் புதையும்
  கத்தி போல் கவிதை..
  சொட்டியனைத்தும் நம் உதிரம்..
  சொல்லாதே இனி தாங்காதென் இதயம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s