நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு

 
பாண்டியன்ஜி
நாஞ்சில் நாட்டு மையப்பகுதியில் குடிகொண்டிருந்தது மாங்கோணம் சிற்றூர். இலுப்பாறு ,காட்டாறு ,உயிறாறு என்று மூவகை நதிகளாலும் ஆங்காங்கே இயல்பாகவே ஏற்பட்டிருந்த நீர் நிலைகளாலும் சூழப்பெற்ற மாங்கோணம் மிகுந்த வளப்பமான பகுதியாயிருந்தது.நீரும் நிலமும் வளம் பெற்றிருந்ததாலேயே மாங்கோணத்து மக்களுக்கு கொஞ்சம் மிதப்பு. பேச்சிலும் போக்கிலும் அது சர்வசாதாரணமாகவே வெளிப்பட்டது..இருநூறு குடும்பங்களே வாழும் மாங்கோணத்தில் இரண்டு மூன்று நிலக்கிழார்களின் ஆதிக்கம்..அவர்களை அண்டி வாழுகின்ற பல்வேறு குடும்பங்கள்.மழை பெய்வதற்கும் பயிர் விளைவதற்கும் ஆதாரமாய் விளங்கும் சின்ன பெரிய தெய்வங்கள் .
அதற்கென அவ்வப்போது ஊர் பொதுவில் எடுக்கப்பெறும் விழாக்கோலங்கள்.அதன் பொருட்டு உருவெடுக்கும் வன்மங்கள் குரோதங்கள் என்ற ரீதியில் கதை துவங்கி நகர்ந்து திடீலென்று முடிகிறது நாஞ்சில் நாடனின் மாமிசப்படைப்பு குறுநாவல். 
மிடுக்கான மிராசுவாக வரும் கடுவாய் சுந்தரம் பிள்ளைக்கும் நெஞ்சு உரமும் நேர்மையும் மிக்க பண்ணையாளாக வரும் கூறுவடி கந்தையாவுக்கும் நிகழுகின்ற அகப்போரில் கந்தையா படைக்கப்படுவதுதான் இந்த குருநாவலின் மையக்கோடாக இருக்குமென்று நினைக்கிறேன்.
ஒரு சிறு கதைக்கு தேவையான பக்கங்களை விட விஞ்சியும் அதே சமயம் ஒரு நாவலுக்குத் தேவையான நீளமும் இன்றி ஒரு குறு நாவலாக உருவெடுத்திருக்கிறது மாமிசப் படைப்பு.
ஒரு மண்ணின் இயல்பான வாசனையை இவரைவிட வேறொருவர் இத்தனை தெளிவுற வெளிப்படுத்தியிருக்கமுடியும் என்று தோன்றவில்லை.கேட்ட படித்த பார்த்த அடுக்கடுக்கான சொற்கள் தகுதிமிக்க இடங்களில் இடம் பிடித்திருக்கின்றன.நாஞ்சில் நாடனென்ற பெயருக்கு பொருத்தமாக ஒரு மண்ணின் சகல வாசனைகளையும் தொடர்ந்து அள்ளித் தெளிப்பது அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை என்றே
கருதுகிறேன்…பரவிவரும் பல்வேறு கலாச்சார நாற்றங்களினால் ஒவ்வொரு மண்ணும் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து போயிருக்கும் நேரமிது.நாஞ்சில் நாட்டு மணற்பிரதேசத்தில் காணமற்போன மறபுகளையும் நம்பிக்கைகளையும் தோண்டித்துருவி எடுத்த நாடனின் உழைப்பு வியப்பைத் தருகிறது. அவருடைய எழுத்துக்களில் காணப்படுகிற அற்புதமான பிழையற்ற மொழி தமிழ் புத்தகங்களின் எதிர்காலத்தில் நல்ல நம்பிக்கை விதைக்கிறது..அதட்டல் போன்ற நடையிலும் ஆங்காங்கே நகைச்சுவை வெளிப்பட்டு நூலுக்கு சுவைகூட்டுகிறது. .மாங்கோணத்தின் நிஜங்களையும் நிழல்களையும் அவர் அறிமுகம் செய்யும் அழகு மெய்சிலிர்க்கிறது. வெவ்வோறு தடவை அந்த மண்ணில் பயணித்த அநுபவம் மாமிசப்படைப்பு என் ருசிக்கு விருந்தாயிருந்ததில் வியப்பொன்றும் இல்லை.
 
இப்போது இந்த குறுநாவலில் இடற நேர்ந்த இடங்களை எண்ணிப்பார்க்கிறேன்.
 
முழுவதும் படிக்க:  http://verhal.blogspot.com/2011/06/blog-post_26.html

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு

  1. ChandraWingchun சொல்கிறார்:

    // பரவிவரும் பல்வேறு “*கலாச்சார நாற்றங்களினால்*” ஒவ்வொரு மண்ணும்//

    ஒரு வேளை இது எழுத்துப் பிழையாயிருந்தால் , இது ஒரு மகத்தான பிழையென்றே கூறுவேன்.

  2. Pandian Govindarajan சொல்கிறார்:

    கூற்றிலேயே அய்யம் இருக்கும்போது பிழை எப்படி மகத்தானதாக இருக்கமுடியும்.அருள் கூர்ந்து பிழையை யாராவது சரி செய்யவும்.
    பாண்டியன்ஜி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s