சங்கிலிப் பூதத்தான்

  நாஞ்சில் நாடன்
பெயர் சங்கிலிப் பூதத்தான் என்றாலும் அழைப்பது சங்கிலிப் பூவத்தான் எனும் மருவிய வழியில்தான். நீங்கள் எண்ணுவதுபோல, பூதத்தாழ்வானுக்கும் பூதத்தானுக்கும் எத்தொடர்பும் இல்லை. பூதத்தாழ்வான் வைணவ அடியான், காலத்தால் பிற்பட்டவன்.கடல் மல்லையில் அவதரித்து நூறு பாசுரங்கள் அருளிச் செய்தவன். பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் என்பது ஈண்டு நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , தீ எனும் பஞ்ச பூதமும் அல்ல. பூதம் என்பது சிவ கணம்.சிவ கணங்கள் கோபத்தினாலோ சாபத்தினாலோ பூமிக்கு அனுப்பப்படும்போது அவை பூதங்களாகிவிடுகின்றன.
               தீயவர்களைத் தூக்கி அப்படியே விழுங்கும் பூதம் ஒன்றுண்டு. அது நாற்சந்தியில் நிற்கும் சதுக்கப்பூதம்.அதற்கு இலக்கியச் சான்று உளது. அது நமது சங்கிலிப் பூத்தானுக்கு பெரியப்பா மகன் என்பார்கள். இதைச் சொல்லும் என் வசம் ஆதாரம் ஏதும் கிடையாது.
             அன்று லட்சம் பேருக்கு ஒன்று எனும் விகிதத்தில் சதுக்கப்பூதம் என்றொரு ஏற்பாடு இருந்திருக்கும் போல. தீயவர் எனில் கயவர், நயவஞ்சகர், ஏமாற்றுபவர், பித்தலாட்டம் செய்பவர், கொள்ளையர், திருடர், கொலைகாரர், காமக்கொடூரர், எத்தர் என நீண்டதொரு பட்டியல். அன்று லட்சம் பேருக்கு இருபது தீயவர் எனும் வீதம் இருந்திருக்கலாம். தீயவரை விழுங்கியே சதுக்கப்பூதம் பசியாற்றிக் கொள்ளவேண்டும். அன்றெல்லாம் அது ஆறாத பசியுடன் இருந்திருக்க வேண்டும்.
                  அந்த வீதம் நூற்றுக்கு இருபது எனும் வீதத்தில் அதிகரித்துவிட்டதாலும் நகரங்கள் தொகை பெருகிவிட்டதாலும் , நகரங்களில் மக்கட்தொகை பெருகிவிட்டதாலும் , சதுக்கப் பூதங்கள் பணியில் புதியதாக நியமிக்கப்படாததாலும் , ஊழியத்தில் இருந்த சதுக்கப் பூதங்கள் சில ஓய்வு பெற்றூவிட்டதாலும் சில சாப விமோசனம் பெற்று கைலாயத்தில் தாய் இலாகாவுக்குத் திரும்பிவிட்டதாலும் , இன்று தீயவரைக் கேள்வி கேட்பாரில்லை.
தட்டச்சு உதவி: பிரவீன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to சங்கிலிப் பூதத்தான்

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    படிக்கும் போது சிரிப்பும் வருகிறது. கண்ணீரும் வருகிறது. நாட்டு நிலைமை இப்படித் தான் இருக்கிறது.
    நன்றி ஐயா.

  2. சங்கிலி பூதத்தான் அருமையான கதை. நல்லவர்களைத் தேடி சங்கிலிபூதத்தான் அலைவதைப் பார்க்கும் போது நமக்கே பரிதாபமாகயிருக்கிறது. நாட்டுப்புற தெய்வத்தின் நிலையை நகைச்சுவையுடன் எழுதிய நாஞ்சில்நாடனை வாழ்த்தி மகிழ்கிறோம்.

  3. தமிழ்ப் புதிர்கள் சொல்கிறார்:

    உலகம் ஒரு வட்டம். இன்று குழந்தைகளைக் குறைவாகவும் செல்வங்களை நிறைவாகவும் வைத்துக்கொண்டு திரியும் பலரும் சங்கிலிப் பூதத்தான் போல்தானோ?

    • பஞ்சவன் சொல்கிறார்:

      சிவ சிவ நாஞ்சில்நாடான் ஐயாவிற்கு வணக்கம்….ஸ்ரீ சங்கிலிபூதத்தார் ஓர் அற்புதக்கடவுள் அவர் அக்கும் வரம் காக்கும் வரம் அழிக்கும் வரம் போன்ற எண்ணிலடங்கா வரத்தினை சிவபெருமானிடம் பெற்று அருள்பாளித்து வருகிறார்….என் குலதெய்வம் ஸ்ரீசங்கலிபூதத்தார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.நீங்கள் என் அப்பன் ஸ்ரீ சங்கிலி பூதத்தானை வேறுவிதமாக சித்தரித்து கேலியாக எழுதியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது ஐயா…..அவர் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எனக்கு உங்கள் எழுத்து கைகொடுக்கும் என்ற ஆவலில் படித்தேன் உங்கள் எழுத்துக்களில் நானும் என் குலதெய்வமும் மன வேதனை மட்டுமே அடைந்தேன்….அவரின் பெருமைகளை இவ்வுலகறிய நல்ல பதிவுகளை இடுங்கள் ஐயா.தவறாக பின்னூட்டம் அளித்திருந்தால் மன்னிக்கவும்….என் தந்தையை கேலியாக பேசினால் சினம் கொள்வது இயல்பு தானே சிவ சிவ திருச்சிற்றம்பலம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s