எட்டுத் திக்கும் மதயானை….1.1

நாஞ்சில் நாடன்
முன் கதை எட்டுத் திக்கும் மதயானை
 
பூலிங்கம் உள்ளே நுழைந்ததும் சண்முகம் வாசலில் நின்று கொண்டான். திரவியம் அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கி வீசினான். ஆறுமுகம் பிள்ளை பளாரெனச்  செவிட்டில் அறைந்தார். சுப்பையா சட்டையைப் பிடித்துக் குலுக்கி கால் முட்டை வைத்து அடிவயிற்றில் ஏற்றினான் எதற்கு அடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. எவரிடமிருந்து அடி எங்கு விழுகிறது என்றும் அனுமானிக்க முடியவில்லை. உதடு கிழிந்ததா பல் உடைந்ததா? வாயில் இரத்தத்தின் இளஞ்சூடும் உப்புக் கரிப்பும். கையை முறுக்கிப் பின்பக்கம் பிடித்துக் கொண்டு முதுகில் கை முட்டை மடக்கி இறுக்கினான் ஒருவன். கீழே விழுந்தவனை ஆளுக்கொரு பக்கமாய்ச் சமுண்டினான் தெய்வநாயகம் பிள்ளை. பிராணன் போகும் வலியாகத் துடித்தது குரல்.அவன் அவயம் வெளியே கேட்காதபடிக்கு, “செறுக்கி விள்ளைக்கு விலாவிலே சமுண்டுலே… சாமானத்திலே சமுண்டுலே…” என்று சத்தங்கள் போர்வீரர் தாக்கும் கூச்சல் போலக் கேட்டன. தெய்வநாயகத்தின் குரல் போலத்தான் தோன்றியது. “நாய்க்குப் பொறந்த பயலுக்கு வெள்ளாங்குட்டி கேக்காலே? எம் பிள்ளைதான் கெடைச்சாலே தாயோளி?”
அட்டை போலச் சுருண்டு, விழும் அடிகளை முதுகிலும் இடுப்பிலும் வாங்கிக் கொண்டிருந்தான். நல்ல காய்த்து உரமேறிய கை விரல்கள் பழுக்கப் பழுக்க விழுந்தன. “அம்மா, அம்மா” என்று கதறுவதைத் தவிர வேறு சொல் பெயரவில்லை. அதிர்ச்சியில் மூளை மரத்துக் கிடந்தது.
இம்சையைப் பார்க்கத் தாங்காமல் காப்பிகடைக்காரர் வந்து குறுக்கே விழுந்தார்.
“போரும், நிறுத்துங்கோ, இது என்னது? ஆட்டை மாட்டைப் போட்டு அடிக்க மாரி… வர்மத்திலே பட்டு வாயைப் பொளந்திட்டாம்ணா நானும்லா வந்து செயில்லே கெடக்கணும்? எல்லாத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா?”
ராமையா பிள்ளை அதட்டலுக்குப் பிறகு அடிகள் விழுவது நின்றன. கொத்தாகத் தூக்கி நிறுத்தினார்கள்.
“மேலால எங்க பிள்ளையோ இருக்க தெசைக்கு திரும்பிப் பாத்தா, வகுந்து போடுவோம் வகுந்து, போ கொண்டுக்கிட்டு…” என்று சொல்லி திரவியம் அடிவயிற்றில் குத்தினான்.
“போரும் போரும்” என்று சொல்லி, ராமையாபிள்ளை அவனை பெஞ்சில் உட்கார வைத்தார். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். புறங்கையால் தள்ளினான்.
 
தொடரும்……
தட்டச்சு உதவி……பிரவீன்

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to எட்டுத் திக்கும் மதயானை….1.1

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    கிராமத்தை பற்றிய விவரிப்பு அருமையாக இருக்கிறது.
    நன்றி ஐயா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s