நாஞ்சில் நாடன்
தீ சுருண்டு எரிந்து கொண்டிருந்தது. ஊரே பற்றி எரிவது போல. ஈசான மூலையில் தெரிந்த தாடகைமலையின் இருண்ட பின்புலத்தில், தென்னந்தோப்புக்களின் கரும் படுதாக்களைவிட உயர்ந்து. அடிவயிற்றின் நெருப்புப் பந்து… அகன்று விரிந்து உயர்ந்து எழுந்து சுருண்டது புகை. பெரும் மூட்டமாகக் கவிந்து கொண்டிருந்தது. மூன்றாம் பிறைச் சந்திரன் வடிவில் கூட்டப்பட்ட சூளைத் தீ போலல்லாமல், பெரிய வைக்கோற் படப்பு எரிவதை இப்போதுதான் பார்க்கிறான். நெஞ்சின் படபடப்பு இன்னும் முற்றும் தணிந்து விடவில்லை, ஓட்டமும் நடையுமாக, யாரும் சந்தேகமாக எண்ணி விடாதபடி, குறுக்குப் பாதைகளைத் தேர்ந்து, குளத்தங்கரை மேட்டில் மரத்தின் இருட்டில் வந்து நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.
இருள் சன்னஞ்சன்னமாக அடர்ந்து வந்தது. மாசி மாதக் காற்றுக்கு ஈரம் கிடையாது, தணுப்புக் கிடையாது. வேகம் கிடையாது. அன்று செவ்வாய்க் கிழமை. முப்பிடாரி அம்மன் கோயிலில் வாரச் சிறப்பு. எட்டரை மணிக்கு மேல் தீபாராதனைக்கு மணி அடிப்பார்கள். ஏற்கனவே சிறுவர் சிறுமியர் கோயில் வாசலில் கிளியாந்தட்டு மறித்துக் கொண்டோ, பாண்டி ஆடிக்கொண்டோ, சலம்பிக் கிடந்தனர். சேண்டை மணி கேட்டதும் பெண்டிரும் ஆடவரும் கோயிலுக்கு நகர்ந்தனர். மாசிச் செவ்வாய்க் கிழமை சிறப்புக்களில் கோயிலில் புட்டமுது, சுண்டல், வடை எல்லாம் உண்டு. நடக்க முடியாத கிழடுகளையும் சமைந்த குமரிகளையும் வீட்டு விலக்கம் வந்த பெண்களையும் தவிர கோயில் மண்டபத்தினுள் ஆண் பெண் தனி வரிசைகளாகக் குவிந்து கிடந்தனர்.
அந்த நேரத்தை முன் கூட்டியே முடிவு செய்து வைத்திருந்தான் பூலிங்கம். சின்ன வயதில் மூக்கன்
தொடரும்…..
sis
நல்ல பதிவு.
கிராமத்தைப் பற்றிய வர்ணனை அருமையாக இருக்கிறது. நாமும் அங்கே இருப்பது போன்ற உணர்வு.
நன்றி ஐயா.