நாஞ்சில் நாடன்
“எக்கா… பவுதீமக்கா…”
“ஆரூட்டி அது?”
“எக்கா நாமில்லா… எசக்கியம்மை… வெளீல வந்துதான் பாரேன்… அடுக்களைக்கு உள்ள இருந்தே சத்தங் குடுக்கியே…”
“ஏட்டி கைசோலியால்லா இருக்கேன்.. அடுப்பிலே இருக்க சொத்தைக் கமத்தீட்டு மீனைக் களுவணும்…”
“மீங்காரன் அதுக்குள்ளே வந்திட்டுப் போயிட்டானா? எங் கண்ணிலேயே காணல்லியே!”
“இப்பத்தாம் போனாம் பாத்துக்கோ… கீளத்தெருவிலே நிப்பான்.”
“சரி போனாப் போறான். இன்னமுங் கடங் கேட்டா தரவா போறான்? மூணு ரூவா பாக்கி நிக்கி. சவத்தை ஏச்சும் பேச்சும் கேட்டு மீனு வாங்கித் திங்கணுமாக்கும்? சின்னப்பயதான் மீனு இல்லேண்ணா சோத்துப் பருக்கை திங்க மாட்டான்… சவம் போனாப் போட்டு… என்ன மீனுக்கா? சாளையா?”
“அந்த எளவை ஏன் கேக்க? நெத்திலி போல இருக்கு… ரெண்டணாவுக்கு அஞ்சுங்கான்… ஆறு கேட்டா அடிவிடிக்கில்லா வாறான். என்ன எளவாம் நாத்தமுண்ணாலும் இருக்கட்டும்ணுதான் எட்டணாக்கு வாங்கினேன். ஆஞ்சு களுவினா ஒரு பிடி இருக்குமோ என்னம்போ? இதை நான் என்னண்ணு கறிவச்சு எத்தனை பேருக்கு வெளம்ப?”
“ஆங்… உள்ளது… அந்தச் சட்டியை எட்டி எடுக்கா? களுவித் தாறன்…”
புறவாசல் படியில் குத்தவைத்து உட்கார்ந்து மூடியில் சாளைகளையும் மீன் சட்டியில் தண்ணீரும் வைத்துக்கொண்டு மீனைக் கழுவத் தொடங்கினாள் இசக்கியம்மை.
மீன் நறுக்க என்று அர்த்த சந்திர வடிவில் தேய்ந்த அரிவாள்மனை புறவாசல் சுவரோரம் சாய்ந்திருக்கும். அந்தத் தேய்ந்த அரிவாள்மனையை எடுத்து வைத்து, ஒரு காலால் முட்டுக் கொடுத்து ஒவ்வொரு சாளையையும் நறுக்க ஆரம்பித்தாள். தலையை வெட்டி, வாலை நறுக்கி
தட்டச்சு உதவி: பிரவீன்
sis
என் ஊருக்கு போனதுபோல் இருந்தது. மிக அருமையான பதிவு. மலரும் நினைவுகளை கொணர்ந்தமைக்கு மிக்க நன்றி.
அருமையான பதிவு.
மீன் மணக்கிறது.