தாமிரபரணி பின்னும் ஒழுகும்

நாஞ்சில் நாடன்“இசை சுதி,தொழுகை எல்லாம் ஒன்றுதான்.
நாம் இறைவனை வெவ்வேறு வழிகளில் அடைகிறோம்.  ஒரு இசைக்கலைஞன் நாளும்கற்றுக்கொள்ளவும் அற்புதமாய் வாசிக்கவும் இயலும்.ஆனால் இசையை ஆன்மீகத்துடன் கலக்க இயலாது எனின்,  இறையனுபவத்தை சிந்திக்க இயலாதெனின் கலை மட்டுமே கலைஞனிடம் இருக்கும். அல்லால் ஆன்ம அனுபவ லயம் இருக்காது. அவன் எப்போதும் பெருங்கடல் முன் நின்று கொண்டிருப்பவனாகவும் புனித மேன்மைகளை எய்த இயலாதவனாகவும் இருப்பான்”
                          – உஸ்தாத் பிஸ்மில்லா கான்.      
பிரசங்கங்கள் கேட்க ஆரம்பித்தது,எனது பன்னிரெண்டாவது வயதில் இருந்து.  சொற்பொழிவு என்றசொல் பின்னரே எனக்கு அறிமுகமானது.பிரசங்கம் என்பது சொற்பொழிவுதானாஎனும் ஐயம் இன்னும் எனக்குத் தீரவில்லை. அதுபோல் நிறைய சந்தேகங்கள். கலாசாலை,பாடசாலை,வைத்யசாலை, உணவுச்சாலை, கோசாலை, நாட்டியசாலை என்பனவற்றின் துல்லியமான பொருளை உனர்த்தும் மாற்றுச் சொல்லை நாம் கையாள்கிறோமா?
         சொல் என்பது கண்டுபிடிப்பல்ல, உருவாவது. பிரேசில் நாட்டில் பயிரான காப்பிக்கொட்டை ஆடு, மாடு,மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருக்கும்.
அந்த அடிப்படையில் பிரேசிலியன் மொழியில் குளம்பு எனும் பொருளில் காப்பி எனும் சொல் அமைந்தது. இதை ஆய்ந்து உனர்ந்து பேரறிஞர் தேவநேயப் பாவாணர் காப்பியைக் குளம்பி எனும் சொல்லால் குறித்தார்.  குழம்பி என்றும் கொட்டைவடி நீர் என்றும் கேவலப்படுத்தி பரிகசித்து, தமிழ்ச் சமூகம் குளம்பி எனும் சொல்லை கொன்றுவிட்டது
து
தட்டச்சு உதவி: பாலா, சிங்கப்பூர்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தாமிரபரணி பின்னும் ஒழுகும்

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    திரு நெல்லை கண்ணனுடன் உள்ள நட்பின் ஆழம் கண் கலங்க வைக்கிறது.
    நீடூழி வாழ்க.

rathnavel natarajan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s