ஐந்தில் நான்கு …..(மிஸ்டர் எஸ் கே முத்து)

நாஞ்சில் நாடன்

மிஸ்டர் எஸ்.கே. முத்து, நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் விரைவு வண்டியில் இருந்து இறங்கியபோது எங்கும் ஒரே நீலமயமாக இருந்தது.  அதிகாலை ஐந்து மணி ஆகிவிட்டாலும் சுற்றுப்புறம் அழுது வடிந்தது. எதிரே தெரிந்த நித்தியானந்த விலாஸ் காபி சாப்பாடு ஓட்டலில் மட்டும் நாலைந்து டிரைவர் கன்டக்டர்கள். ஒன்றிரண்டு அதிகாலைப் பயணிகள்.
வண்டியிலிருந்து இறங்கி, அதன் விலாவில் இருந்து எடுக்கப்படும் பெட்டிகளுக்காகக் காத்து நின்றான். முகத்தில் இருந்த குளிர் நீலக் கண்ணாடியைக் கழற்றிய பிறகுதான் அவனுக்குத் தான் பெட்டிகளை அடையாளம் தெரிந்தது. ஏர் பேக், சஃபாரி சூட்கேஸ், வி.ஐ.பி. பிரீஃப்கேஸ் என்று மூன்று.
இறக்கிவைக்கப்படும் வரை இடதுகையில் கூலிங்கிளாசின் காம்பைப் பிடித்து ஆட்டிக்கொண்டும் பற்களால் அதைப் பொயக்கடி கடித்துக்கொண்டும் நின்றவன், பெட்டியைக் கண்டவுடன், பான்ட் பாக்கெட்டில் இருந்து மணிபர்சை எடுத்தான். ஜிப் மூடிய அதன் வாயைக் கிழித்து, மடிக்கப்படாமல் முழுதாக இருந்த புதிய நோட்டுக்களில் பத்து, ஐந்து, இரண்டு என்று தாண்டி ஒற்றை ரூபாய்த் தாளை உருவி இறக்கி வைத்தவனிடம் நீட்டினான்.
அவனுக்கு இப்போது ஒரு யோசனை. நாகர்கோயிலில் இருந்து உடனேயே ஊருக்குப் போவதா? இல்லை ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கி, ஷேவ் செய்து, குளித்து உடைமாற்றி, பத்துமணி சுமாருக்குப் போவதா?
சொந்த ஊரான ஈசாந்திமங்கலம் அங்கிருந்து நாலே மைல்தான். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை அந்த வழியாக பஸ்கள் உண்டு. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பம்பாயில் இருந்து வருபவன் பஸ்ஸிலா போவது? அது கௌரவத்துக்கு இழுக்கு என்று அவனுக்குத் தோன்றியது.
 டாக்ஸியில் போவதானால் ஆறுமணிக்கே ஊருக்குப் போய் இறங்கிவிட முடியும். அதிகாலையில் தெரு முற்றங்களில் சாணித் தண்ணீர் தெளிக்கும் சில பெண்டுகளின் விழிகள் நெற்றிமீது ஏறுவதைத் தவிர அதில் என்ன கவர்ச்சி இருக்கிறது? பலர் பார்வையிலும்

 
தட்டச்சு உதவி: பிரவீன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ஐந்தில் நான்கு …..(மிஸ்டர் எஸ் கே முத்து)

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    நன்றி.

  2. Jabar சொல்கிறார்:

    இதில் எதுவுமே இன்னும் மாறவில்லை.. வளைகுடா நாட்டி இருக்கும் எங்களின் நிலைதான்… பம்பாயாக இருந்தாலும், துபாயாக இருந்தாலும் தமிழனின் நிலை இதுதான்.. ஊருக்காக வாழும் இந்த வாழ்க்கை என்று மாறுமோ..

  3. Naga Sree சொல்கிறார்:

    நாஞ்சில் ஐயாவின் சிறந்த வார்த்தைகளில் , மிகவும் சிறந்த கதை

  4. Rajbabu சொல்கிறார்:

    I studied this story in my 11th std thamizh book. Apo athoda artham purila, ipo puriyuthu…

Jabar க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s