அம்பாரி மீது ஒரு ஆடு

 

நாஞ்சில் நாடன்
முருகானந்தா ஹாலில் முத்தமிழ் சங்கத்தின் நாடக விழா இன்று தொடங்குகிறது என்று சின்னக்கண்ணுவுக்கு ஏற்கனவே தெரியும். எனவே ஆறரை மணிக்குள் சுவாமிநாதன் ஆபீஸில் இருந்து புறப்பட்டு விடுவார் என்று நினைத்தான். அப்படியானால் மலபார் ஹில்ஸ் போய்ச் சாப்பிட்டு உடை மாற்றி மனைவியோடு மாட்டுங்காவில் இருக்கும் முருகானந்தாவை எட்டு மணிக்குள் அவர் அடைய முடியும். எனவே ஆறு மணிக்கெல்லாம் அவன் கார் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு  உட்கார்ந்துவிட்டான்.
 இன்று எட்டரை மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய்விடலாம் என்ற நினைப்பு அவனுள் மகிழ்ச்சியைக் கிளர்த்திற்று. ஒரு கணேஷ் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு அக்கம்பக்கத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
 சாதாரண நாட்களில் சுவாமிநாதன் எட்டு மணிக்குள் ஆபீசை விட்டுக் கிளம்பியதில்லை. தினமும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அவரையும் காரையும் மலபார் ஹில்ஸில் விட்டுவிட்டு அப்புறம் பஸ் பிடித்து அவன் வீட்டுக்குப் போய்ச் சேர ஒன்பதரை மணியாவது ஆகும். எனவே, இந்த சங்கீத நாடக விழா சீசன்களை, பொருள்வயிற் பிரிந்த கணவன் வரவு பார்க்கும் சங்ககாலப் பெண்ணைப் போல, சின்னக்கண்ணு ஆவலோடு எதிர்பார்ப்பான். ஹால் முன்னால் காரை பார்க் செய்து, பூட்டிச் சாவியைக் கொடுத்துவிட்டு அவன் போய்விடலாம். திரும்புகையில் சுவாமிநாதனே டிரைவ் செய்வார். அவர் மனைவிக்கும் டிரைவிங் தெரியும். ஆனால் இரவு பதினொரு மணிக்குப் பிறகு ஒருவர் பார்வையிலும் படாமல் தான் டிரைவ் செய்வதும் செய்யாமலிருப்பதும் ஒன்றுதான் என்பதால் அந்த அம்மாள் கணவரையே ஓட்டச் செய்வாள்.
 தமிழ் கல்ச்சுரல் புரோக்ராம் ஒன்று விடாமல் சுவாமிநாதன் பார்ப்பதற்குக் காரணம் கலை மீது கொண்ட கணக்கற்ற காதலல்ல.  கஃப்பரேடின் இருபத்து நாலு மாடிக் கட்டடம் ஒன்றின் பதினெட்டாவது ஃப்ளோரில் ஏர் – கண்டிஷன்ட் ‘ஜில்’லில் உட்கார்ந்து பெர்கின்ஸன் அண்ட் தாகூர் கம்பெனி லிமிடெட்டின் அகில இந்திய மார்க்கெட்டிங் டிவிஷனை ஆட்டிப் படைப்பதுதான் காரணம். வாரத்தில் நான்கு நாள்
 
தட்டச்சு உதவி: பிரவீன்
..

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to அம்பாரி மீது ஒரு ஆடு

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s