கோம்பை

 நாஞ்சில் நாடன்
 கோம்பை என்பதோர் ஊரின் பெயர். ஊரின் பெயர் எனும்போது, அம்பாசமுத்திரம் அம்பை ஆகியதுபோல என்று எண்ணலாகாது. கோம்பை என்பதே முழு பெயர்தான். ஊர்களின் பெயர்களுக்குப் பெரும்பாலும் துல்லியமானதோர் வரலாறு சார்ந்த, பண்பாடு சார்ந்த காரணம் இருக்கும். அல்லது இடுகுறிப் பெயராக இருக்க வேண்டும். அதைச் சுருக்கி விளிக்கும்போது, பெயர் அதன் தன்மையை இழந்து, இளித்துக்கொண்டு நிற்பது அடாது. எடுத்துக்காட்டாக, சிராப்பள்ளி என்று பெயர் வரக் காரணம் உண்டு. அது திரு எனும் சிறப்பு அடைமொழி பெற்று திருச்சிராப்பள்ளி ஆகியது. அதைத் திருச்சி எனக் குறுக்கும்போது பொருளற்ற முண்டமாக நிற்பது அருவருப்பாக இல்லையா? ஆனால் கோம்பை அவ்வாறல்ல.
இந்திய தேசிய நாய்களில் ராஜபாளையமும் கோம்பையும் பெயர் பெற்றவை. இடத்தின் பெயர் நாய்க்கும் ஆனது எனின் தமிழ் இலக்கணத்தின் படி அது இட ஆகுபெயர். 
கோம்பை என்பது ஊர் பெயர் என்பதுபோல், நாயினத்தின் பெயர் என்பதுபோல, அது ஒரு ஆடவப் பெயரும் ஆகும். சாதி, இனப் பாகுபாடுகள் துறந்து அந்தப் பகுதி மக்கள் அப்பெயரை அணிந்து வாழ்ந்தனர்.
இனி உங்களில் சிலர், கோம்பை எங்கிருக்கிறது எனும் கேள்வி எழுப்புவது குறித்து :தேனி மாவட்டத்தில், தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், சின்னமனூர் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி தேவாரம் போக வேண்டும். தேவாரத்தில் இருந்து போடிநாயக்கனூர் போகும் பாதையில் ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.
 
**

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to கோம்பை

 1. rathnavel natarajan சொல்கிறார்:

  கோம்பை – அருமையான பதிவு.
  நிறைய விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
  நிறைய விஷயங்கள், புதிய தகவல்கள் உங்கள் பதிவு மூலம் கற்றுக் கொள்கிறேன்.
  நன்றி ஐயா.

 2. vadaliyuuraan சொல்கிறார்:

  சாதாரணமாக ஏனோ,தானாத் தனமாகவும்,அதிக் ஹிட் வாங்குவதற்காககவும் உள்ளதை மறைத்து,தொட வேண்டியதைத் தொடாமல், தொடாமல் தூர நிற்கவேண்டிய சினிமா போன்ற குப்பைகளைத் தொட்டு நிற்கும் பதிவர்களிடையே இருந்து உங்கள் எழுத்துக்கள் வேறுபட்டு நிற்பதைக் காண்கின்றேன். கோபப்பட வேண்டிய நேரங்களில் சமூகத்தின் மீதான் உங்கள் கோபத்தில் இருக்கும் நியாயத்தையும் ஏற்று மதிக்கின்றேன். ஈழத்த்மிழன் என்ற பதிவு மிகச் சிறப்பு. அதற்காக நன்றியுடன் ஈழத்திலிருந்து ஓர் உறவு.

 3. Hari சொல்கிறார்:

  Excellent! Its just not details, how u connect the less known details with emotions to make the story great!

 4. பிங்குபாக்: கும்பமுனி கதைகள் « சித்திரவீதிக்காரன்

 5. Dr. S. Kaliappan சொல்கிறார்:

  I am son of the great man Koambai alias Sudalyandi s/o Chinnakkannu, from Erachakulam. It is wonderful to read your narration, especially my father’s hard work and kindness towards the poor. I understand from the narration that you had observed closely my father,( my hero) and I thank you from bottom of my heart for the nice najil words and Amman AARASANAI at veeraanam aaru. I am shocked with the end i.e.” slapping on the face” . I know my father is great and if it is true, he could have kept it simply and focused on his family.

  Dr Kaliappan,S.(drskaliappan@gmail.com)

  • S i Sulthan சொல்கிறார்:

   வாழ்த்துக்கள், ஒரு மா மனிதனின் மகனுக்கு!

   • Dr. S. Kaliappan சொல்கிறார்:

    சுல்தான் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி

    சுடலையாண்டி காளியப்பன்
    (முன்னாள் துணை வேந்தர்
    அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி)

 6. Naga Sree சொல்கிறார்:

  மனித உணர்வுகளை மிகவும் அற்புதமாக பதிவு செய்த
  நாஞ்சில் ஐயாவுக்கு நன்றி!

 7. கோம்பை கதையை நாஞ்சில்நாடன் சொல்லும் அழகே அழகு. கோம்பை ஊரின் பெயராகி, சித்தராகி, குமரிமாவட்டத்து மக்களின் பெரும்பாலானோர்க்கு பெயராகி என அவர் கதையை நகர்த்தி செல்லும் விதம் அவ்வளவு அழகு. கதையில் வரும் கோம்பை நம் மனதைக் கவர்கிறார். கோம்பை நிஜமான மனிதர் என்று அறியும் போது இன்னும் அவர் மீதான மதிப்பு உயர்கிறது. பகிர்விற்கு நன்றி.

 8. Ayem Perumal Ganesh சொல்கிறார்:

  திரு.நாஞ்சில்நாடன் அவர்களுக்கு,கோம்பை கதை மனதை நெகிழ வைத்தது.கதையில் வருகின்ற 27 சிறுதெய்வங்களின் பெயர்களை அறிய விரும்புகிறேன்.
  அ.கணேஷ்,
  சென்னை-50.
  ganesh2108@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s