நாஞ்சில் நாடனின் கல்யாணக் கதைகள் 4
அக்கரை என்றோர் ஊரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
பொதுவாக ஆற்றின் மறுகரை என்பது பெறுபொருள்.
ஆற்றின் இக்கரையில் பிரதானமான ஊராக சுசீந்திரம் இருப்பதால், இரண்டாகப் பிளவுபட்டு கிடக்கும் மறுகரையில் இருக்கும் ஊரது. நானிங்கு சொல்ல வருவது அந்த அக்கரையைதான். இந்த கர்நாடக இசை உலகில் கசிந்து குழைந்து உருகிவரும் வயலின் இசையொன்று அந்த ஊர்ச் சிறுமிக்குச் சொந்தமானது என்பதும் அறிக.
வடக்கு மலையில் உற்பத்தியாகி, நாஞ்சில் நாட்டின் குறுக்கே பாயும் பழையாற்றின் அக்கரை அது. ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி அது. ஒருகாலம் என்பது அண்மையான ஐம்பது ஆண்டுகளே. இன்றும் அது வற்றாத நதிதான்., ஆனால் ஜீவநதி அல்ல. வடமேற்க்கு பருவ மழையும் தென்கிழக்கு பருவ மழையும் பொழிந்து வளமாக்கும், நீளமான நீல மலைக்காட்டில் ஊறி ஒழுகிவரும் ஆறு அது. பூதப்பாண்டியின் இறச்சகுளத்தின் புத்தேரியின் கீழ்புறமும் திருப்பதிசாரத்தின் மேற்புறமுமாக மிகுந்த கலகலப்புடன் ஓடிவரும் ஆறு, வீரநாராயண மங்கலத்தில் பாறையாறு என்றழைக்கப்பட்டது. வழியெங்கும் அந்த ஆற்றில் மாடு குளிப்பாட்டுவார், மனிதர் குளிப்பார், துவைப்பார், நெல்வயற் புரவுகளில் மிஞ்சும் தண்ணீர் ஓடையாகி வந்து கலக்கும். எனினும் ஆறு அசுத்தப்படுவதில்லை. அழுக்குகளை மீன்கள் தின்னும். கொழுப்புச் சேராத இளம்பெண்ணின் மென்மயிர் சிலிர்க்கும் அடிவயிற்றுப் பரப்புபோல நிரப்பாக வெளுத்துக் கிடக்கும் மணல் அரிக்கும். கரை ஓரங்களில் நிற்க்கும் நாணல், தாழை, பேய்க்கரும்பு, கோரை,ஆனைஅருக்கம்புல் புதர்கள் சலிக்கும். பிறவிப் பயன்போல ஆறு சுத்தமாக ஓடிவந்து கொண்டி
இது கதை! நிஜத்தை பார்க்கணுமா? இங்கே சொடுக்குங்களேன் (எஸ் ஐ சுல்தான்)
ஐயா,
ஐய்யம் இல்லை. ஐயம். அதை கொஞ்சம் சரி செய்யுங்கோ. பெரிய எழுத்தாளரே இப்படித்தான் எழுதி இருக்காருல்லா. அதாஞ்சரின்னு ஒரு கூட்டம் கிளம்பினாலும் கிளம்பும்.
////ஐய்யம் இல்லை. ஐயம். ////
நன்றி பிரீமேசன், தவறு என்னது, எழுத்தாளரது அல்ல.
சாட்டையடி!…நாஞ்சில் நாடனின் அருமையான நடை.
//பொதுவாக ஆற்றின் மறுகரை என்பது பெறுபொருள்//
ஆற்றின் என்றல்ல நீர்நிலைகளின் மறுகரை எனக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.
அக்கரை சுப்புலக்சுமி அற்புதமான வயலின் வித்தகி; இவர் இசையை சிலவருடங்களுக்கு முன்
பாரிசில் நடந்த தியாகராஜர் விழாவில் கேட்டு மெய்மறந்தேன்.
இவர் சிறுமி எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் இப்போ பேரிளம் பெண்.
இவர் ஊடுருவல் பார்வை..கதையெங்கும் பளிச்சிடுகிறது.
அருமை ஐயா.
அருமையான கதை.நன்றி.