நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 3

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)
இடைவெட்டு
நாஞ்சிலாரோடு அமைந்த இப்பயணத்தில் ஒரு சிறிய இடைவெட்டு. மன்னிக்கவும். இதுவரை அவரோடு பயணித்ததில் அவரது எல்லாப் படைப்புகளிலும் அவரைத்தான் கதாநாயகனாய், கதைப் பொருளாய் உணர்கின்றேன். எந்தவித விரைவுத் தொலைத் தொடர்பற்று இருந்த காலத்தில், ஊர்விட்டு ஊர்வந்து, தன் மொழிவிட்டு புதுமொழியின் ‘நா’ அசைவில் அமர்ந்துகொண்டு, பிழைப்பின் வலிக்கு உழைப்பை உவந்தே நல்கி, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பொழுது, நகர்ந்து செல்லும் தெற்கத்திய இரயில், இவரை நாஞ்சில் நாட்டுக்கும் பம்பாய்க்குமாய் இட்டுச் சென்று மீண்டும் விட்டு விடுகிறது.
இவரது வாழ்வின் ஒவ்வொரு கண்ணியில் பிறந்த கனிகள் நாவல்களாக, சிறுகதைகளாகத் தோன்றின. அவை ஏதாவது ஒரு பரிசிலைப் பெற்றுத் தந்து, மக்களின் அங்கீகாரத்தை வெளிப்படுத்தின. இலக்கியம் படித்து, இலக்கியம் படைக்க வாராது, தன் வாழ்வியலை, வாழ்வை இலக்கியமாகப் படைத்துக்கொண்டிருக்கிறார். கடந்து 35 ஆண்டுகளாக, போகிற போக்கில் நறுக்கென்று மனத்தைத் தைத்தாற்போல் சொற்கள் வந்து விழுகின்றன. அதுவும் பாங்காய்த்தான் படைப்பில் அமர்ந்து விடுகின்றன.
சொல்லிச் சொல்லித் தீராதவை, கட்டுரைகளில் பதிவு செய்யப்படுகின்றன. கதைகளிலும் கதைப் பொருட்களுக்கு இசைவான தகவல்கள் அடுக்கப்படுகின்றன. அத்துணையும் அவரது உழைப்பு. கட்டுரையின் தலைப்பு எதுவாயினும், அதற்குத் தேவையான அளவுத் தகவல்கள் கடைசிச் சொட்டு வரை அப்படியே அள்ளி வைக்கிறார். இதில் அவர் தாம் விவசாயியின் மகன் என்று நிருபிக்கிறார். இவரது உழைப்பின் பிரமிப்பினுடே இவரது கட்டுரைகளில் பயணிக்கிறேன். நீங்களும் அந்தப் பிரமிப்பை அனுபவிக்கலாம். வாருங்கள், நண்பர்களே.
நாஞ்சில் நாடன் கட்டுரைகள்
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
‘காலச்சுவடு’ வெளியீடு இது. 120 பக்கங்கொண்ட டெமி வடிவத்தில் வெளிவந்திருக்கின்றது. ஓவியர் ஜீவாவின் கோட்டோவியங்கள், இதற்கு உயிர் அளித்திருக்கின்றன. நாஞ்சில் நாடனின் பேராசிரியர் காந்தியவாதி, சமூகவியல் ஆய்வாளர் முன்னுரை அளித்தது மேலும் மதிப்பு பெறுகிறது.  ஆசிரியருடைய முன்முகத்துடன் 12 கட்டுரைகள் இதில் அடக்கம். இறுதி விடைமுகம் ஒன்றும் அளித்து முடிந்திருக்கிறார். காலம் நிகழ்த்திய மாற்றங்களைக் கூறும் நூல்.
‘நாஞ்சில் நாட்டின் கிடப்பு’ என்னும் முதல் கட்டுரை, அதன் அமைந்த இடத்தைப் பற்றிப் பகிர்கிறது. கிழக்கே ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கும், மேற்கே பன்றி வாய்க்காலுக்கும், தெற்கே மணக்குடிக்கும், வடக்கே மங்கலம் எனப்படும் குலசேகரத்துக்கும் இடைப்பட்ட பூமி என நாஞ்சில்  நாட்டைச் சொல்வார்கள். உத்தேசமாகச் சொன்னாலும் இன்று நாஞ்சில் நாடு என்று வழங்கப்பெறுவது கன்னியாகுமரி மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்த தோவாளைத் தாலுகாவும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகளுமே ஆகும். பிற மாவட்ட அரசியல், கலை, இலக்கிய ஆய்வாளர்கள் கருதுவது போல, மொத்த கன்னியாகுமரி மாவட்டமுமே நாஞ்சில் நாடு எனக் கொள்வது சரியானது அல்ல. வடக்கிலும் வடக்கிழக்கிலும் வடமேற்கிலும் மலைகள் சூழ்ந்த பகுதியும் ஆன செழிப்பான நிலத் துண்டு நாஞ்சில் நாடு எனக் கொள்ளலாம்.
நாஞ்சில் நாட்டு முதன்மைக் குடிகள் வெள்ளாளர்களும் சாம்பவர்களும் ஆவார்கள். சாணர் என்று அழைக்கப்படும் நாடகர்கள் பின்னாளில் வந்தவர்கள். இந்நாட்டு வெள்ளாளர்கள், மருமக்கள் வழியினர், மக்கள் வழியினர் சைவர் என மூன்று வகையினர் உண்டு. திருமணச் சடங்குகளுக்கும் சாவுச் சடங்குகளுக்கும் வைத்தியன் என்றும், நாசுவன் என்றும், குடிமகன் என்றும் அழைக்கப்பட்ட நாவிதர்களுக்கு முக்கியமான பங்கு இருந்தது. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களிடையே வரதட்சணையும் கல்யாணச் செலவுகளும் அதிகம்
முழு கட்டுரையும் படிக்க: http://www.vallamai.com/?p=3144

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s