நாஞ்சில் நாடன்
.
.
.
.
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
நன்றி ஐயா.
தங்களது பதிவைப் படிக்கும் போது கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றி நிறைய விபரங்கள் தெரிந்து கொள்கிறேன். தங்களது தமிழ் என்னை ஈர்க்கிறது.
வணக்கம் ஐயா.
புத்தனாறு கரையினில்தான் எனது ஊரும் உள்ளது. சிறுவயதில் குளிக்கும்போது பெண்கள் தொலைத்த கொலுசை எடுக்க முங்கும்போது படிகம் போல் தண்ணீர் இருக்கும். இப்போது வெள்ளமடத்தில் வந்து கலக்கும் சாக்கடையின் புண்ணியத்தில் ஆறே நாறுகிறது. வயல்களினூடே ஓடும் வாய்கால்களில் தண்ணீரை அள்ளி பருகியதுண்டு. இப்போது மாடுகூட குடிக்காது அந்த தண்ணீரை,அவ்வளவு பூச்சிக்கொல்லி மருந்து நாற்றம்.
கொஞ்சம் உருப்படியாய் இருப்பது தேர்குளம் (தேரூர் குளம்) மட்டும்தான் என நினைக்கிறேன்.
பரிபாடலில் ‘தமிழ்வையை’ என்று போற்றப்பட்ட வைகை இன்று வற்றி வறண்டு போய் கிடக்கிறது. சித்திரைத் திருவிழாவிற்கு அழகரே நீர் நிரப்பிய தொட்டியில் தான் வந்து இறங்கி கொண்டிருக்கிறார். இயற்கையை நாம் கண்டபடி பாழ் படுத்துவதால் பறவைகள்,மிருகங்கள் போன்ற உயிரினங்கள் கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன. நீரின்றி அமையாது உலகு! மேலும், 95ல் உறவினர் வீட்டிற்கு சென்ற போது வெள்ளமடத்து கால்வாயில் விளையாடியிருக்கிறேன். நினைவூட்டிய பாலாவிற்கும் நன்றி!
நாஞ்சில் நாடனுக்கும், சுல்தானுக்கும் நன்றி!