குமரி மாவட்ட சாகித்ய அகாதமி எழுத்தாளர்கள் சங்கமம்

இம்மாதம் 16-ம் தேதி சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கமம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் கு. பச்சைமால் சனிக்கிழமை கூறியதாவது:
இலக்கிய களம் என்ற பெயரில் அண்மையில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழாவும், சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் பொன்னீலன், தோப்பில் முகமது மீரான், நீலபத்மநாபன், நாஞ்சில் நாடன் ஆகியோர் ஒரே மேடையில் பேசும், சங்கமம் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் அருகே ரோட்டரி அரங்கின் மேல்தளத்தில் இம்மாதம் 16-ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாகவும், எழுச்சியூட்டும் வகையிலும் எழுத்தாளர்களின் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.
அமைச்சர் என். சுரேஷ்ராஜன் வாழ்த்திப் பேசுகிறார்.  இளம் இலக்கியப் படைப்பாளிகளும், இலக்கிய ஆர்வலர்களும் இதில் பங்கேற்கலாம் என்றார் அவர்.
தகவல் உதவி ponnappapillai.a  
 Kadukkarai  
 subpon@bsnl.in           

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to குமரி மாவட்ட சாகித்ய அகாதமி எழுத்தாளர்கள் சங்கமம்

  1. Rathnavel Natarajan சொல்கிறார்:

    அருமையான நிகழ்ச்சி. இப்படி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் எல்லோரையும் பார்க்க முடியும். நான் வரமுடியவில்லை.
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s