எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் சார்பில் வரும் 27.02.2011 – ஞாயிறு அன்று பாராட்டு விழா நிகழ இருக்கிறது. விழாவில் நாஞ்சிலாரின் ‘திகம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளியிடப்பட இருக்கிறது. விஜயா மு. வேலாயுதம், கவிஞர் செல்லகணபதி, முனைவர். சி.மா. ரவிச்சந்திரன், மரபின் மைந்தன் முத்தையா, கண்மணி குணசேகரன், இரா. சின்னசாமி, கா.சு. மணியன் மற்றும் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இடம்: கீதா ஹால், ரயில் நிலையம் எதிரே
நேரம்: மாலை 5 மணி
மிக்க அன்புடன்,
—K. செல்வேந்திரன்
வாசக நண்பர்களுக்கு சிறப்பு முன்னோட்டமாக‘திகம்பரம்’ கட்டுரை தொகுப்பின் நட்சத்திர கட்டுரையாகிய ‘திகம்பரம்’ எனும் கட்டுரை இத்தளத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
அன்புடன்: (எஸ்.ஐ.சுல்தான்)

A Ponnappa Pillai March 7 at 5:07pm
நாகர்கோவிலில் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு(3-3-11) நடந்த பாரட்டுவிழா மிகவும் அழகாக நடந்தது. கற்றாரைக் கற்றாரேக் காமுறுவர் என்பதற்கேற்ப எழுத்தாளரை எழுத்தாளர்களைக் கொண்டே பாராட்டியது மிகவும் பொருத்தமாகவும் விழா மிக சிறப்புடையதாகவும் அமைந்தது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட ஒரு தாய் போல கல்லூரி அவரைக் கண்டு மகிழ்ந்து கொண்டாடியதை நான் கண்டு மகிழ்ந்தேன்.அவரது ஏற்புரைப் பேச்சு மாணவர்களுக்கு அறிவுரையாக அமைந்தது.அவரது மலரும் நினைவுகளைச் சொன்னது கூட ஒரு சிறுகதை போல இருந்தது. எத்தனையோ விழாக்களைக் கண்ட அவரை நாகர் கோவில் இந்துக் கல்லூரி முன்னாள் மாணவர்கள்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்அன்போடு மாத்திரமே பாராட்டியது அவர் கண்டவற்றுள் முதன்மையாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
I want to send the photos of the function on 3-3-11 to NaanjilNaadan.But i dont know the e-mail ID
Ponnappan.A
11-3-11