தேவராஜ் விட்டலன்
நாஞ்சில் அவர்களின் படைப்பாளுமையை விவரித்து சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை எனினும் நாஞ்சில் நாடன் அவர்களை வாசித்துபுரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனப் பந்தலில் தற்பொழுது எண்ணக் கொடிகளாக மிகையாக படர்ந்துள்ளது .
இந்த நிகழ்வு பற்றிய விவரங்களைதிரு . பென்னேஸ்வரன் அவர்களும் ,
திருமதி எம்.ஏ. சுசிலா அம்மாவும் ,
திருமதி முத்துலச்சுமி அவர்களும்
பதிவு செய்துள்ளதால், விவரமாக பதிவு செய்ய தேவையில்லை என நினைக்கிறேன் .
அறிஞர்களின் உரைகளை கேட்கும் ஒவ்வொரு நிகழ்விலும் புதிய புதிய செய்திகளை கற்றுக் கொள்ள முடிகிறது என எண்ணும் போது மனதிற்கு உற்சாகமாய் இருக்கிறது .