நாஞ்சில் நாடன் கலைமாமணி விருதை வாங்குவதா? வாங்ககூடாதா?

கலைத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் கலைமாமணி எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது.
கலைமாமணி விருது இயல், இசை நாடக துறையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.
நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை ”இயற்றமிழ் கலைமாமணி என்று விரிவான பார்வையில் பார்த்தால் அவர் விருதை  வாங்குவதா கூடாதா என்பதை கீழ்கண்டவர்களுடந்தான் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
 
 2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:
கவிக்கொண்டல் செங்குட்டுவன் (இயற்றமிழ் கலைஞர்),
ராணி மைந்தன் (இயற்றமிழ் கலைஞர்),
கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் (இயற்றமிழ் கலைஞர்),
 2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:
சா. கந்தசாமி (இயற்றமிழ்),
 ராஜேஷ் குமார் (இயற்றமிழ்),
நாஞ்சில் நாடன் (இயற்றமிழ்),
 2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:
பொன். செல்வ கணபதி (இயற்றமிழ்),
பேராசிரியர் தே. ஞான சேகரன் (இயற்றமிழ்),
டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்),
டாக்டர் தமிழண்ணல் (இயற்றமிழ்),
 

இல்லாமல்

நாட்டிய கலைஞர்,
கர்நாடக இசை கலைஞர்,
இசைக் கலைஞர்,
நாதஸ்வரக் கலைஞர்,
சின்னத்திரை கலைஞர்,
கிளாரிநெட் கலைஞர் ,
ஓவியக் கலைஞர்,
சமையல் கலைஞர்,
சின்னத்திரை இயக்குநர்,
இசையமைப்பாளர்,
ஒளிப்பதிவாளர்,
சிற்பக் கலைஞர்,
பண்பாட்டுக் கலை பரப்புனர்,
நகைச்சுவை நடிகர்,
கிராமியப் பாடகர்,
சிலம்பாட்டக் கலைஞர்,
ஒயிலாட்டக் கலைஞர்,
கூத்துக் கலைஞர்,
நாடகக் கலைஞர்,
இலக்கியச் சொற்பொழிவாளர்,
சமயச் சொற்பொழிவாளர்,
இசை ஆசிரியர்,
குரலிசைக் கலைஞர்,
வயலின் கலைஞர்,
மிருதங்க ஆசிரியர்,
மிருதங்க கலைஞர்,
வீணை கலைஞர்,
புல்லாங்குழல் கலைஞர்,
தேவார இசைக் கலைஞர்,
மெல்லிசைப் பாடகி,
தவில் கலைஞர்,
பரத நாட்டியம்,
நாடக நடிகர்,
திரைப்பட நடிகர்,
திரைப்பட நடிகை,
முதலியவர்களுடன் இயற்றமிழ் கலைஞரை நாம் ஒப்பிடுவது என்ன நியாயம்?
அதுவும் இவைகளும் ஒன்றா ???????
இயல், இசை, நாடகம் என்பதில் நாடகம் என்பது சின்னத்திரையும், திரைப்படமும் அடங்குமல்லவா?
அந்த துறைகளுக்கு பரிசு வழங்குவதிலும் என்ன தவறு?
 
அதுமட்டுமில்லாமல் கலைமாமணி விருதுக்கு அவரவர்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
மேலும் வேண்டியவர்களுக்குதான் வழங்கப்படுகிறது,
பணம்கொடுத்தும் வாங்கப்படுகிறது,
அரசியல் விளையாடுகிறது என்றெல்லாம் சொல்கிறோம்.
இது எல்லாமே இல்லாமல் ஒரு இயற்றமிழ் கலைஞருக்கு அவரது தகுதிக்காக மட்டுமே வழங்கப்படும்போது ஏன் அவர் மறுக்க வேண்டும்.??????
 
மெடிக்கல் காலேஜுல மெரிட்டுல இடம் கிடைத்தும் –
பணம்கொடுத்து நிறையபேர் சீட் வாங்கியிருக்காங்க,
சிபாரிசுல நிறையபேர் சேர்ந்திருக்காங்க,
அதனால நான் சேரமாட்டேன்ணு சொல்லுறதும்,
அல்லது நீ சேராதேண்ணு நாம சொல்லுறதும் நியாயமா???

…………………………….

அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை.
ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே……(நாஞ்சில் நாடன்)
……………………………………..எஸ்ஐ.சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to நாஞ்சில் நாடன் கலைமாமணி விருதை வாங்குவதா? வாங்ககூடாதா?

 1. manimuthu.s சொல்கிறார்:

  மறுத்தும் ஓரு விளம்பரம் வாங்கலாம். கிடைக்காதவர்கள் வாங்கு வாங்காதே என்று பட்டி மன்றம் வைக்கலாம்.தேடி வந்த பரிசை ஏற்றுக் கொள்வதில் என்ன பாவமா ?

 2. perumal சொல்கிறார்:

  Kalaimaamani has become a joke in the last 5 years.We wonder what kalai one has found in Anoushka and thamanna in their field.
  In simple form it is given to every Tom,Dick and aArry without any standards.
  I feel Not only aAnjil Nadan,but all other literary figures should not accept these awards.

  The cruel part is this is coinciding with your sahitya academy award chrologically.

 3. சாகித்ய அகாடமி விருது நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டதே தாமதம். அதைவிடத் தாமதம் கலைமாமணி விருது தற்போது வழங்குவது. பத்தரிக்கைகள் கூட நடிகைகள் பெயரைத்தான் பெரிதாய் போடுகிறார்கள். எழுத்தாளர்களை யார் இங்கு மதிக்கிறார்கள்?

 4. முத்து சொல்கிறார்:

  சுல்தான் அவர்களே !

  மெடிகல் காலேஜில் சேருவதும் விருது வாங்குவதும் எவ்வகையில் ஒன்று என்று எண்ணுகிறீர்கள் என்று தெரியவில்லை.

  கலைமாமணி விருது தமிழக அரசு வழங்குவது. அது தாழ்வுற்று தரமிழந்து பாழ்பட்ட ஒன்று. அது நாஞ்சில் ஏற்பது எனக்கு ஏற்பில்லை.

  எழுத்தாளன் எதிர்பார்ப்பது அங்கீகாரத்தை மட்டுமே என்ற நாஞ்சிலின் மேற்கோள் சரிதான். ஆனால் யாரிடமிருந்து ? எந்த வரிசையில் நின்று என்ற கேள்வி வருகிறதே !

  சிங்கம் நாய்தரக்கொள்ளுமோ நல்லரசாட்சியை ??

  “நாஞ்சில், புறக்கணியுங்கள் – அதுவும் இடக்கையால்” என்பதே என் பணிவான விண்ணப்பம்.

  அன்புடன்
  முத்து

 5. ramji_yahoo சொல்கிறார்:

  அவர் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்பதே என் கருது.
  இருந்தும் முடிவு எடுக்க வேண்டியது அவரின் சொந்த விருப்பத்தை poruthe.

 6. ஈஸ்வரன் சொல்கிறார்:

  மெடிக்கல் காலேஜுல மெரிட்டுல இடம் கிடைத்தவருக்கு இரண்டாம் வகுப்பில் (மெரிட்டில்) உனக்கு இடம் கொடுக்கிறேன் என்றால் அவர் அதில் சேர வேண்டுமா?
  ராஜேஷ் குமாருக்கு இந்த விருது பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் நாஞ்சில் நாடனுக்கு? இந்த விருது வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்துவதுபோல் இருக்கிறது.

 7. haranpasanna சொல்கிறார்:

  இந்த கேவலமான விருதை நாஞ்சில் நாடன் புறக்கணிக்கவேண்டும். ஆயிரம் ??????????? போட்டாலும் இதுதான் நியாயம்.

 8. மு.சிவகுருநாதன் சொல்கிறார்:

  கலைமாமணி விருதுகளை கூறுகட்டி வழங்கும் தமிழக அரசு -மு.சிவகுருநாதன்

  http://musivagurunathan.blogspot.com/2011/01/blog-post_30.html

 9. Arun சொல்கிறார்:

  நாஞ்சில் கலைமாமணி விருதினை வாங்க வேண்டும் , வாங்கிய பின் (அன்றோ அடுத்த நாளோ ) பத்திரிகையாளர் மற்றும் சமுக ஆர்வலர்கள் முன்பாக அவ் விருதினை நாஞ்சில் பிடித்த இதுவரை விருது புரங்கணிக்க பட்ட எழுத்தாளர் ஒருவருக்கு அவ் விருதினை அவர் கொடுக்கும் தருணத்தில் இவ் விருதினை கொடுக்கும் அரசியல் முட்டாள்களின் முகங்கள் கிளியும் .
  பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற ஆதி விளையாட்டு நாஞ்சில் லால் தொடங்கட்டும்

 10. kumar சொல்கிறார்:

  பெருமாள்

  //Kalaimaamani has become a joke in the last 5 years.We wonder what kalai one has found in Anoushka and thamanna in their field.//

  ஆய கலைகள் அறுபத்து நான்கில் (64) விருது கொடுபதற்கான எந்த கலை தாக்கத்தை அவர்களிடம் இருந்து கண்டார்களோ தேர்வு அமைபினர்கள்

 11. manimuthu.s சொல்கிறார்:

  அன்பர் அருண் கருத்து புரட்சிகரமாக இருக்கிறது.

  இதை ஆதரிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s